உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. கழக அமைச்சர்

அரங்கர்க்குக் கழகப்பணி பெருஞ்சுமையாயிற்று. தாம் தாங்கும் அளவில் அமைந்த பணியன்றே! கூட்டுப் பங்கு சேர்த்து இயக்கும் பணியை யன்றோ தொடர்ந்துளார்! அவர் தொடர்ந்த நாளில் கூட்டுறவு அமைப்புப் புதியது! அதிலும், நூல் வெளியீட்டுத் துறையில் கூட்டுறவைக் கனவிலும் கருதிப் பார்த்திராக் காலம்! அன்றியும், கூட்டுறவுத் துறையை நம்பிப் பணம் போடுவாரும் அரியர்; அப்படிப் பணம் நம்பிப் போட்டவர்களும் ஏமாற்றத்திற்கு ஆட்பட்டும் வெறுப்புற்றனர். இந் நிலையில், அவர் எடுத்துக் கொண்டு செயல் எண்ணியது போல் அவ்வளவு எளிமையாக அமைந்துவிடவில்லை. கழகந் தொடங்கிய இரண்டு மூன்று ஆண்டுகளில் நெருக்கடியும் உண்டாயிற்று. மூலப் பணம் முழுவதும் (50,000) சேர்வதற்கு 25 ஆண்டுகள் ஆயின என்றால், அதுவும் அரங்கர் வாழ்நாளுக்குப் பின்னர் அவர் தம் இளவல் வ. சு. அவர்கள் முயற்சியால் நிறைவுற்றது என்றால், அந்நாளில் அரங்கர் பட்டபாடுகள் த்துணைத்தென உரைக்கக் கூடுமோ? “என் அருமை நண்பர் வ. திருவரங்கம்பிள்ளை அவர்கள் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தைத் தோற்றுவித்து நிலைநாட்டப் பெரும்பாடுபட்டார். அதற்கு முதலீடு அமையப் பங்குகள் சேர்க்க அந்தக் காலத்துத் தேசபக்தர்களைப் போலவே எல்லையில்லாத் துன்பங்களை ஏற்றுத் தன்னலமற்றுப் பெரும்பணி ஆற்றினார்” என்று கம்பன் அடிப்பொடி திரு. சா. கணேசன் அவர்கள் நினைவு கூர்வது அரங்கர் ஈக (தியாக) வாழ்வைத் தெள்ளிதில் விளக்குவதாம். (வ. சு. பவளவிழா மலர். பக். 12)

திருவரங்கர் பணி கழகத்தோடும் ஒடுங்கிவிடுமோ? பொருள் ஈட்டல் ஒன்றனை மட்டுமோ கருதிக் கழகத் திருப்பணியில் ஒன்றினார்? அவர் உள்ளம் சமயப் பணியிலும், மொழிப் பணியிலும், சீர்திருத்தப் பொதுப் பணியிலும் ஒன்றி நின்றது. அப்பணிகளுக் கெல்லாம் நிலைக்களமாகக் கருதியே கழகப் பணியில் ஊன்றினார்! ஆகலின், கழகத்திற்குரிய பணிகளை வரம்பு செய்து கொண்டு திட்டமிட்டுச் செயலாற்றினார். நூல்

L