உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

48

இளங்குமரனார் தமிழ்வளம் - 26

வெளியீட்டுத் துறையைச் செவ்விதில் தடைப் படாமல் செய்தற்குத் தம் அருமைத் தம்பியரையே கழகத் தொடக்க நாள் முதல் பொறுப்பாளராக்கினார். செந்தமிழ்ச் செல்வியாம் 'அச்சுப் பணியோ, நச்சுப் பணியோ" என்னும் பொறுப்பைத் தம்பியார் முழுதுறத் தாங்கிக் கொண்டமையால், அரங்கர் மற்றைப் பணிகளில் முழுதுற ஈடுபட்டார். அருமைச் செல்வியைச் சீருற வளர்க்கும் செவிலியாகவும் தம் அருமை இளவலாரையே தொடக்க நாள் முதல் வைத்தார்.

கழகந் தொடங்கிய முதல் ஆண்டில் ஐந்து நூல்களும், இரண்டாம் ஆண்டில் ஏழு நூல்களும், மூன்றாம் ஆண்டில் பதின்மூன்று நூல்களும், நான்காம் ஆண்டில் இருபது நூல்களும் என நூல் வெளியீடு ஆண்டுதோறும் மிகுந்து பெருகியது. 1961ஆம் ஆண்டில் 1008ஆம் நூல் வெளியீட்டு விழாவைக் கழகம் சிறப்புறக் கொண்டாடியது. மூன்றாம் ஆண்டிலேயே செந்தமிழ்ச் செல்வி என்னும் திங்களிதழைத் தொடங்கி இடையறவு படாமல் நடத்துவதாயிற்று. இவற்றின் விரிவையெல்லாம் இவர்தம் இளவலார், கழக ஆட்சியாளர் வ. வ. சு. வரலாற்றில் விரியக்

காணலாம்.

கழகத்தின் தொடக்கக் காலப் பதிப்பே கண்கவர் வனப்பினதாக இருந்தது. அது அக்காலப் பெருமக்களின் பாராட்டுதலுக்கு உரியதாகவும் அமைந்தது. கழகத்தின் சார்பில் 3-12-1923இல் திருநெல்வேலியில் அந்நாள் வளர்ச்சித்துறை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பெற்ற திவான்பகதூர் டி. என். சிவஞானம் பிள்ளை அவர்களுக்கு ஒரு நல்விருந்து தந்து பாராட்டும் எடுக்கப்பெற்றது. அப்பொழுது பாராட்டுக்கு நன்றியுரைக்கு முகத்தான் அமைச்சர் கழகப் பதிப்பினைப் பாராட்டினார் :

66

ங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு சர்வகலாசாலை அச்சுக் கூடத்தார் L பல மொழிகளிலுள்ள இலக்கண இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அழகாக அச்சிட்டுக் கண்ணைக் கவரும் வண்ணம் கட்டடஞ் செய்து உலகத்தாருக்குப் பயன்படுமாறு செய்துவரும் நன்முயற்சி போல நம் நாட்டில் நம் தமிழில் அவ்விதம் எக்காலத்து அச்சிட்டு வெளிவருமென்று தாம் ஆவலுடன் எதிர்பார்த்திருந்ததாகவும் அந்தக் குறை திருவருளியக்கத்தால் குறித்த கழகத்தாரால் நிறைவிக்கப்பட்டு வருகின்றதென்றும், அதற்குக் காரணம் கழகத்தின் நன்முயற்சி களைக் கண்ணும் கருத்துமாய்ப் பார்த்துவரும் அமைச்சர்கள்