உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

க்

49

படிக்க

இருவரின் தளர்வில்லா ஊக்கமென்றும், இக் கழகத்தார் வெளியிட்டுள்ள அழகிய புத்தகங்களை வாங்கிப் ள மனமில்லாதவர்களுங்கூடப் புத்தகத்தின் அழகிய பதிப்பையும் கண் கவர் வனப்பினையும் நோக்கியாவது வாங்கி வாங்கி வைக்கவேண்டுமென்ற எண்ணம் தமிழ்மக்களுக்கு ஏற்பட்டு வி. ட்டதென்றும் தாம் இதன் நன்னோக்கத்தை விரும்பி ஒரு பங்காளியாகச் சேர்ந்து பங்குகள் எடுத்து ஆதரிப்பதுபோலச் சைவ நன்மக்கள் ஒவ்வொருவரும் போதிய பங்குகள் எடுத்து உதவி புரிந்து ஆதரிக்க வேண்டும் என்றும், அவ்விதம் செய்தல் இத் தமிழ்நாட்டுக்கு மட்டுமன்றி எந் நாட்டிற்கும் நன்மையாம் என்றும் கூறித் திருவருளை வேண்டினார்கள் (செந்தமிழ்ச் செல்வி 1 : 414-5)

6

கழகம் தோன்றிய தொடக்க நாளிலேயே சமயப்பணி செய்தற்காகத் திருநெல்வேலியில் திருநெல்வேலி சைவ சித்தாந்த சங்கம்' என்னும் பெயரிய நிறுவனம் நிறுவப்பெற்றது. அஃது, அவ்வப்போது கூடி ஆக்கப் பணிகள் பல செய்தது. ஆண்டுதோறும் சிறப்பாக மாநாடுகள் நடாத்தித் தமிழ் நாட்டிற்கும் தமிழ்மொழிக்கும் சிவநெறிக்கும் ஆக்கமான தீ தீர்மானங்களை நிறைவேற்றியும் வலியுறுத்தியும் தொண்டாற்றியது. கழக அமைச்சரே அதன் பொறுப்பாளராக

பல

இருந்து இயக்கினார்.

திருநெல்வேலி சைவ சித்தாந்த சங்கத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா 9-2-24, 10-2-24, 11-2-24 ஆகிய மூன்று நாள்களிலும் நடந்தது. அம்பாசமுத்திரம் அறிஞர் வி.பி. காந்திமதி நாத பிள்ளை தலைமை தாங்கினார். அவர் ‘வணிக முறையோடு தமிழ் வளர்ச்சி சமய வளர்ச்சி ஆகியவைகட்குக் கழகத்தார் செய்துவரும் அறச் செயல்களின் திறத்தை’ வியந்துரைத்தார். திருக்குறள் பயின்ற மாணவ மாணவியர்களை ஆய்வு செய்து 47 பேர்களுக்குப் பரிசும், தேவாரம் பண் முறையோடு யோடு ஓதிய மாணவியர் இருவருக்குப் பரிசும் சங்கச் சார்பில் வழங்கப்பெற்றன. கடந்த ஆண்டுப் பணிகளையும் இனிச் செய்யவிருக்கும் பணிகளையும் கழக அமைச்சர் திருவரங்கனார் அறிக்கையாகப் படைத்தார். மறைத் திருவர் சுந்தர ஓதுவா மூர்த்திகள் இன்னிசைக் கருவிகளுடன் திருமறை ஓத வீதி உலா வந்து கூட்டம் நடாத்தும் மரபு சிறப்புடன் குறிக்கத் தக்கதாக இருந்தது. (செ. செ. 2 : 50-52)

ம்

2: