உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

இளங்குமரனார் தமிழ்வளம் - 26

சங்கத்தின் நான்காம் ஆண்டு நிறைவு விழாத் தலைமை சிவக்கவிமணி கோவை சி. கே. சுப்பிரமணிய முதலியார் ஏற்றார். விழா 1-1-25, 2-1-25 ஆகிய இரு நாள்களில் நிகழ்ந்தது. அமைச்சர் அரங்கனார் சங்க அறிக்கையை அவையில் படைத்தார். செயலாண்மை மிக்க அரங்கர் படைத்த அறிக்கை வெற்றுரையாய் அமையுமோ?

அறிக்கையை உள்ளடக்கித் தம்

அவைத் தலைவர் தலைமையுரையைப் பொழிந்தார் :

“உங்கள் அமைச்சர் அறிக்கைப் பத்திரம் ஒன்று வாசிக்கக்கேட்டீர்கள். அதிலே தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினது சென்ற ஆண்டின் முயற்சிகளையும், அதைச் சார்ந்த தென்னிந்திய சைவசித்தாந்த சங்கத்தின் முயற்சிகளையும் தெளிவாய் எடுத்துக் கூறினார்கள். அவற்றைக் கேட்டு நான் மிகவும் களி கொண்டேன்.

66

இக் கழகத்தார் சைவநூல்களைப் பதித்து வெளியிடு வதன்றியும் பிரசங்கங்களின் வாயிலாகச் சைவப் பிரசாரமும், தமிழ்ப் பிரசாரமும் நடத்தி வருகின்றமையும் சாத்திரங் கற்பித்து வருகின்றமையும் தமிழ்ச் சர்வகலாசங்கமாக இதனை நிறுவ முயற்சி செய்து வருவதனையும் கேட்கத் தமிழ்மக்கள் யாவரும் களிகூர்வர். இதன் மூலமான புத்தக வெளியீடுகள் உயர்ந்த பதிப்புகளாகவும் கண்கவர் வனப்பின வாகவும் உள்ளமையால் அமைச்சரவர்கள் அறிக்கையிட்டபடி கழகத்தாருக்கு வியாபார முறையிலும் ஆதாயம் கொடுத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியைத் தருகின்றது. இதன் சார்பாக ஓர் அச்சுக்கூடம் நிறுவப்பெறுதல் வேண்டும் என்பது மிக அவசியமாகும்.

66

இனி இக் கழகத்தின் சார்பாகத் தாபிக்கப்பெற்ற இச் சைவசித்தாந்த சங்கம் செய்துவரும் வேலைகளும் நமக்குக் களிப்பூட்டுவனவேயாகும். முதலாவதாக முழுமதி, முளைமதித் தினங்களிலும் நாயன்மார்கள் குருபூசை நாட்களிலும் இன்னிசைக் கருவிகளுடன் கதை உருவான பிரசங்கங்கள் நடந்தன. இரண்டாவதாக திருக்குறட் பாடங்களில் பரீட்சைகள் வைத்து அவற்றிற்றேர்ந்த மாணவ மாணவிகளுக்கு வெகுமதிகள் கொடுத்து வருதலால் இந் நாடெங்கும் திருக்குறள் பயிலப் பெற்றுவரக் காரணமாயிற்று. மூன்றாவதாக, திருக்குற்றாலத் தலத்தில் சாரற் பருவகால மாநாடு என ஒன்று ஆரம்பித்து அதில் பல பெரியார்கள் பெருஞ் சொற்பொழிவுகள் நிகழ்த்தி