உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

51

உபகரித்தமையும், நந்தனார் சரிதம் மாணிக்கவாசகர் சரிதம், சைவசமயம், சுந்தரமூர்த்தி மாண்பு என்னும் விசேட உரைகள் நிகழ்ந்தமையும் கேட்க உவனக பூத்தது. நான்காவது முயற்சியாக நூற்கருவூலம் ஒன்று தாபித்து ஒழுங்கு செய்யப்பெற்று வருவதும் கவனித்து மகிழ்தற்பாலதேயாம். ஐந்தாவதாக நெல்லைத் திருநெறித் தொண்டர் குழாம் என ஒன்று தாபிக்கப்பெற்று அதன் அங்கத்தினர் அரிய திருப்பணிகளை மேற்கொண்டு நடத்தி வருதல் கழிபேருவகை பயப்பதாம். வாரங்களிலும் தினந்தோறுமாகக் குறித்த காலங்களில் இக் குழாத்தினர் திருவள்ளுவர் சாத்திரத்தைப் பரப்புதல், தமிழ்மறை ஓதுதல், ஓதுவித்தல், கொல்லாமையைப் பரப்புதல், சிவசின்னங்களை யாவரும் அணியச் செய்தல், வீடுகளிற் சென்று பெண்பாலார்க்குச் சைவத் தமிழ்க் கல்வி பயிற்றுவித்தல் ஆகிய பதினொரு நோக்கங்களைக் கைக்கொண் டவர்களாய் மிகவும் ஆர்வத்தோடும் நடத்திவருவது நாம் எல்லாரும் போற்றத்தக்க முயற்சியாகும். இவ்வாறு கழகமும் சங்கமும் குழாமுமாகக் கூடி நடத்திவரும் உண்மைத் திருத் தொண்டானது இறைவன் திருவருளாலே இனிது நிலவுவதாக’ (செந். செல்வி 3 : 13 - 14) என்று நலங்கனிந்த பாராட்டும் நல்வாழ்த்தும் உரைத்தார்.

L

وو

வரவர

சைவசித்தாந்த சங்கத்தின் செயல் திட்டம் விரிவுற்றது. 31-10-1925,1–11-1925 ஆகிய நாட்களில் மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவின் தொடர்பாகத் திருநெல்வேலியில் திருக்குறள், சமயப் பாடம், பெரிய புராணம் முதலிய பரிசுத் தேர்வுகளை நடாத்தியதுடன், தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம், நாகர்கோயில், திருவனந்தபுரம், தஞ்சாவூர் முதலிய இடங்களிலும் நடாத்தியது. இப்போட்டிகளில் அவ் வாண்டில் 152 மாணவர்கள் பங்கு கொண்டனர். இப் போட்டியை ஆண்டுதோறும் நடாத்தியதுடன் மேலும் மேலும் விரிவாக்கியும் நடாத்தியது என்பதும்

குறிப்பிடத்தக்கது.