உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. தொண்டின் உறைப்பு

திருவரங்கனார் அடங்கி அமைந்து கிடப்பார் அல்லர்; செயல் வீரர்; எடுத்த செயலில் முழுதுறப் பதிந்து அடுத்தூன்றும் ண்மையர்; ஆகலின் பொதுப்பணியில் பிறர்க்கெல்லாம் அரிதாகிய செயற்பாடு, அவர்க்கு எளிதாக வாய்த்தது. அவர்க்கென வாய்ப்பாக இயற்கை அருளிய ஆளுமைத்திறம் பொதுத் தொண்டுக்குப் பொலிவூட்டி வளர்த்தது. தனியொரு வருக்கு அமைந்த தகவார்ந்த திறங்கள் மன்பதைப் பொதுவாய் வயங்கும் என்பதற்குத் திருவரங்கனார் வாழ்வு சீரிய எடுத்துக் காட்டாகும்.

தென்னிந்திய சைவசித்தாந்த சங்கம், கழகஞ் சார்ந்ததோர் அமைப்பு என்பதை அறிவோம். அதன் தலைவரும் அமைச்சர் களுமே இதன் பொறுப்பாளர்களாகவும் இருந்தனர். ஒரு வணிக நிறுவனம் தன் பொருட் பணியை ஒருபால் நடாத்தினும் மறுபால் அருட்பணியும் நடாத்துதல் தலையாய கடமை என்பதைச் செயலில் செயலில் நிறுவிக் காட்டும் அமைப்பாகவே தென்னிந்திய சைவ சித்தாந்த சங்கமும், கழகஞ் சார்ந்த பிற அமைப்புகளும் வெளிப்படுத்துகின்றன. அமைப்பின் விளக்கமும் செயலும் என்பவை எவை? அமைப்புடையார் விளக்கமும் செயல்களுமே அல்லவோ?

தென்னிந்திய சைவசித்தாந்த சங்கத்தார் 1927 பிப்ரவரித் திங்களில் ஓர் அறிக்கை விடுத்தனர் :

66

சைவசித்தாந்த

உண்மை நமது நாட்டில் எங்கும் விளங்குதற்குச் சைவசித்தாந்த சங்கம் ஒவ்வோர் ஊரிலும் நிறுவிச் சைவ சமய நூல்கள் படித்தும் சொற்பொழிவு செய்தும் வரல் வேண்டும். சைவ சித்தாந்த சங்கம் நிறுவுவதற்கு எங்கள் உதவி வேண்டுபவர்கள் எங்களுக்கு எழுதும்படி கேட்டுக் கொள்கிறோம். சைவசித்தாந்த சங்கம் எந்த ஊரில் நிறுவினாலும் அதைப்பற்றி எங்களுக்குத் தெரிவிக்கும்படி வேண்டிக் கொள்கிறோம்."