உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

வறிக்கை

வேலை

சய்யத்

53

ஒரு

இவ் வ் தொடங்கியது. திருநெல்வேலி சைவசித்தாந்த சங்கத்தின் கிளையாக சைவசித்தாந்த சங்கம் நிறுவப்பெற்றது. பெருமக்கள் 34 பேர்கள் கிளைச்சங்க உறுப்பினராகினர்.

திருவைகுண்டம் வட்டக் கழகத் தலைவர் சங்கரலிங்கக் கவிராயர் தம் ஊராகிய வெள்ளூரில் ஒரு சங்கம் நிறுவுதற்கு வேண்டுகோள் விடுத்தார். இவ்வாறே மற்றை மற்றைச் சிற்றூர் பேரூர்களிலும் சைவசித்தாந்த சங்கத்தின் அமைப்பு அலை கிளர்ந்தது; பணியும் மேற்கொண்டது.

செயற்களரியாகத்

இஃதிவ்வாறாக இதன் இணைச் திருநெறித் தொண்டர்குழாம் என்பதொன்றும் உருவாயிற் றன்றோ! காரைக்குடி அரு. சோமசுந்தரன் என்பார் திருநெறித் தொண்டர் குழாங்கள் என்பதுபற்றி ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார். “எல்லா இடங்களிலும் எப்பொழுதும் தொடர்ந்து ஊர்கள் தோறும் சென்று சொற்பொழிவுப்பணி, உண்மைத் தொண்டு செய்யக்கூடிய திருநெறித் தொண்டர் குழாங்களை ஏற்படுத்துதல் வேண்டும். ஒவ்வொரு குழாத்திலும் பத்துத் தொண்டர்கள் இருந்தால் போதும். இக் குழாங்களில் சிவநெறியுணர்ச்சியுடையவர்கள் அனைவரும் பேரறிஞராயினும் - சிற்றறிஞராயினும் இளையராயினும் பெரியோராயினும் - அலுவல் ஓய்வுபெற்றோராயினும் யாவரும் தாராளமாகச் சேர்ந்து புரியலாம். இவ்வாறு

ஒரு

தாண்டு

-

தாண்டு புரிதலின் சைவ நன்மக்கள் பலருக்கும் பேரார்வம் இருத்தல் வேண்டும். அனைவரும் சிவத்தொண்டு புரிதலே என் பிறப்புரிமை என எண்ணுதல் வேண்டும்" என்றும், “இவ்வாறு நாம் நமது செந்தமிழ்ச் சைவத் திருநாட்டிலே ஓராயிரம் தொண்டர்களடங்கிய நூறு திருநெறித் தொண்டர் குழாங் களையாவது தோற்றுவித்து ஒரு சில ஆண்டுகள் தொண்டு புரிந்து வருவோமானால் சிவமணமும், செந்தமிழ் மணமும், சீவகாருணிய மணமும் பண்டை நாளிலே பரவி இருந்ததைப் போல் நன்கு பரவுதல் கூடும்” என்றும் வேண்டியிருந்தார்.

நல்ல தொண்டுகளையெல்லாம் நயந்தேர்ந்து நல்லுணர் வுடன் எடுத்துக்கொள்ளும் திருத்தொண்டர் திருவரங்கனார் இவ்வேண்டுதல் அறிக்கையைக் கண்டார். அதன் வழியே சைவ சித்தாந்த சங்கத்தின் ஒரு கிளையாகத் திருநெறித் தொண்டர் குழாத்தைத் தோற்றுவித்துச் செயலாற்றினார். ‘பேர்' அளவுக்கு எந்த அமைப்பையும் தொடங்கி அமைதல் திருவரங்கர்