உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

இளங்குமரனார் தமிழ்வளம் – 26

அறியாததன்றே! 'பேரளவில்' திருநெறித் தொண்டர் குழாம் பணிசெய்தற்கும் தூண்டலும் துலக்கலுமாக இருந்தார்.

அம்பாசமுத்திரம் சார்ந்த கோபால சமுத்திரத்திற்குத் திருநெறி தொண்டர்குழாம் சார்ந்த உறுப்பினர் பன்னிருவர் 18-1-1925 ஞாயிறு அன்று கொல்லா நோன்பினைப் பரப்பும் நோக்குடன் சென்றனர். அத் தொண்டர் குழாத்தின் தலைவர் இந்துக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் திரு. வி. சிதம்பர ராமலிங்கம்பிள்ளை என்பார். அவர் தலைமையில் சீவகாருணியம், கொல்லாமை, புலான் மறுத்தல், அருளுடைமை முதலிய

தலைப்புகளில் திருநெறித் தொண்டர்களாகிய திரு. க.

௫.

நெல்லையப்ப பிள்ளை, நரசிங்க நல்லூர் திரு. சுந்தரத்தேவர், திருவள்ளுவத் தொண்டர் திரு. மாணிக்கவாசகம்பிள்ளை, திரு பு. சிதம்பர புன்னைவனநாத முதலியார் ஆகிய பெருமக்கள் உருக்கமும் உயர்வுமிக்க உரையாற்றினர்.

மறு

பொழிவுகேட்ட ஊர்ப் பொதுமக்கள் உருகினர்; உள்ளம் கினர்; அக் கூட்டநிறைவின் போழ்திலேயே, தாங்கள் இனி ஊனுண்பதில்லை என்று பதினேழு பெருமக்கள் உறுதிமொழி தந்து உறுதிக் உறுதிக் கைச்சான்றும் வைத்தனர். ன்னும் பலர் கொல்லாநெறி கொண்டொழுக இசைந்தனர்.

திருநெறித் தொண்டர் குழாத்தின் திருப்பணி இவ்வாறு பலப்பல இடங்களில் பலப்பல காலங்களில் சீருற நடைபெறலா யிற்று. முதற்கண் இத் திருநெறித் தொண்டர் குழாத்தினைப் பற்றி அறிக்கை விடுத்த காரைக்குடி அரு. சோமசுந்தரனார் சைவ சித்தாந்தச் சங்கஞ்சார்ந்த தொண்டர் குழாத்தின் பணியின் பெருமையை அறிந்து மகிழ்வுற்றார். அதனால் “இவ் வேண்டு கோளை முதன்முதலாக எளியேன் அன்புடன் செய்துகொண்ட காலத்து, உண்மையுடன் வேலைசெய்யும் சங்கத்தினராகிய நமது திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த சங்கத்தார், தங்கள் சங்கத்தின் சார்பில், ஓர் திருநெறித் தொண்டர் குழாத்தினை ஏற்படுத்திச் சில திங்களாகத் தொண்டு புரியச் செய்து வருவது கண்டு களிப்புற்று அவர்களுக்கு எனது மனமொழி மெய்களாலாகிய பெருவணக்கத்தினைச் செலுத்து கிறேன். அத் திருநெறித் தொண்டர் குழாத்தினருக்கும் எனது பெருநன்றியறிதலும் பேரன்பும் உரியனவாகுக என்று நன்றி கலந்த பாராட்டுத் தெரிவித்தார். தொண்டின் பெருமையைத் தொண்டரே உணர்வர் அன்றோ!