உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

சூன்

55

சமயத் தொண்டுக்குச் சைவசித்தாந்தச் சங்கமும், திருநெறித் தொண்டர் குழாமும் என்றால் தமிழ்த் தொண்டுக் கெனவும் தனியோர் அமைப்பு வேண்டுமெனத் திருவரங்கர் கருதினார். அதனால் 1924ஆம் ஆண்டு திங்களில் தென்னிந்திய தமிழ்ச் சங்கம்' தோன்றியது. தமிழ்மொழி தாடர்பான ஆக்கப் பணிகளை செய்தற்கென அமைக்கப்பெற்ற சங்கம் தனித் தமிழ்த் தேர்வுகள் நடாத்துதலையும் மேற்கொண்டது.

இச்

தனித் தமிழ்த் தேர்வுகளில் முதலாவது, தமிழ்த் தேர்வு; இரண்டாவது இளந்தமிழ்ப் புலவர் தேர்வு; மூன்றாவது தமிழ்ப் புலவர் சிறப்புப் பட்டத் தேர்வு. இதில் காப்பியச் சிறப்புப் புலவர், நீதிநூல் சிறப்புப் புலவர், சங்க நூற் சிறப்புப் புலவர், இலக்கணச் சிறப்புப் புலவர், சமய நூல் சிறப்புப் புலவர் (1) சைவ சித்தாந்தம், (2) வைண சித்தாந்தம் என்னும் பாகுபாடுகள் உண்டு. இதன் முதல் தேர்வு 1926ஆம் ஆண்டு சூன் திங்கள் 28ஆம் நாள் முதல் சூலைத் திங்கள் 5ஆம் நாள் முடிய நிகழ்ந்தது. இத் தேர்வில், சங்க நூல் புலவர் சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர் ஒருவரே யாவர். அவரும் வெற்றி பெற்றார். “பதிவெண். 15. மூன்றாவது வகுப்பு. அவர் யாவர்? “ஞா. தேவநேசப் பாவாணன், தமிழாசிரியர், கிறித்தவ சாலை, சென்னை" (செந். செல். 4 : 334) என்பது முகவரி.

கழகம் நடாத்திய தனித் தமிழ்த் தேர்வில், சங்க நூலை ஆய்ந்து சிறப்புப் பட்டம் பெற்றவர் - முதல் தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற ஒரோ ஒருவர், தனித் தமிழ்த் தந்தை மறைமலையடிகளாரின் பெரும் பாராட்டுக்கு உரியவராக இலங்கி, தமிழே உலக மொழிகளின் தாய் என்பதை நிறுவிக் காட்டிய மொழி ஞாயிறு பாவாணர் எனின் தனித் தமிழ்த் தேர்வுக்கே ஒரு தனிச் சிறப்பு அன்றோ!

தேர்வு திருநெல்வேலியில் மட்டுமா நடந்தது? திருச்சிராப் பள்ளி, சிதம்பரம், சென்னை, திருவனந்தபுரம் ஆகிய இடங் களிலும் நடந்தது. இத் தேர்வுத் திட்டமே பின்னர்த் திருவள்ளுவர் செந்தமிழ்க் கல்லூரி நடாத்தவும் வகை செய்தது.

அரங்கனார் ஆர்வம், தமிழ்ப் புலமை பெருக வேண்டும்; எங்கும் பரவவும் வேண்டும். அதனைப் பரப்புதற்குரிய வாயில்கள் பல; அவற்றுள் தேர்வு நடாத்திப் பரிசு வழங்குதலும் பட்டம் தருதலும் என்பது ஒன்று! நூல் வெளியிடுதல், விற்பனை