உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

இளங்குமரனார் தமிழ்வளம் - 26

செய்தல், அறிஞர்களைக் கூட்டி ஆராய்தல், அறிஞர்களைத் தேர்ந்து சொற்பொழிவாற்றச் செய்தல், மாநாடு நடாத்துதல், கருத்தரங்கு கூட்டுதல் என்பனவெல்லாம் தமிழ் வளர்க்கும் துறைகளே என்பது தெளிந்த திருவரங்கர், அப் பணிகளுக் கெல்லாம் மூலமாக அமைந்த புலமையாளர்களை உருவாக்குதலே தலையாய பணி என மேற்கொண்டு தக்கோர்களைத் தேர்ந்து தனித் தமிழ்த் தேர்வு நடாத்தியது பெரும் பாராட்டுக்குரிய செயலேயாம். அரங்கர் ‘கழகத் தந்தையரே' எனினும் அவர் 'மன்பதைத் தொண்டர்' என்பதன்றோ ஒப்பிலா ஒரு பெரும் புகழாய் ஓங்குவது என்க.

திருவரங்கர், 'வினையால் வினையாக்கிக் கொள்ள வல் விரகர்' என்பதற்கும், 'உயிரிரக்க உரவோர்’ என்பதற்கும் ஒவ்வொரு சான்று காட்டுவோம் :

கோடைக்கானல்

உதகமண்டலம் ஆகிய

ங்கள்

கோடை வாழ்விடங்கள் என்பதை அறிவோம். அவ்விடங்களில் கோடைப் பருவங்களில் கூடும் மக்கள் பெறும்பயனை நோக்கி 'மலர்க் காட்சியும், படகுப் போட்டியும்' அரசு நடாத்தி வருகின்றது. அவ்வாறே குற்றாலத்துப் பருவநாளில் 'சாரல் மாநாடு’ கூட்டு மக்களை மகிழ்விக்கின்றது அரசு. இச் சாரல் மாநாட்டை 1924ஆம் ஆண்டிலேயே தொடங்கிச் சில ஆண்டுகள் தொடர்ந்து நடாத்தினார் திருவரங்கர்.

திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த சங்கத்தின் சார்பில் குற்றாலச் சாரல் மாநாடு பேரறிஞர் கா. சு. பிள்ளை தலைமையில் 20-6-1924 முதல் 22-6-1924 முடிய மூன்று நாள்கள் நிகழ்ந்தது. திருக்கோவலூர் ம. ரா. குமாரசாமிப் பிள்ளை, தூத்துக்குடி ந. சிவகுருநாத பிள்ளை, காரைக்குடி அரு சோம சுந்தரஞ் செட்டியார், ராய. சொக்கலிங்கஞ் செட்டியார், சிந்துபூந்துறை வி. சிதம்பர ராமலிங்கம் பிள்ளை, திருநெல்வேலி சிதம்பரநாதபிள்ளை, குலசேகர பட்டினத் முத்துக்குமார சாமியாபிள்ளை, மறைத்திருவர் சுந்தர ஓதுவாமூர்த்தி ஆகிய பெருமக்கள் மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

உயிரிரக்க உரவோர் அரங்கர் என்பது பாளையங் கோட்டை ஆயிரத்தம்மன் கோயிலில் நிகழ்ந்துவந்த எருமைக் கடாப் பலி விலக்குப் போராட்டத்தால் விளங்கும்.