உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

வ்

57

சமயப்

ஆயிரத்தம்மன் கோயிலில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை எருமைக் கடா ஒன்று, சூல் ஆடு ஒன்று, சூல் பன்றி ஒன்று ஆகிய மூன்றையும் பலியிடுவது வழக்காக இருந்தது. அதனை ஒழிப்பதற்காகப் ‘பலி விலக்குச் சங்கம்’ என ஒரு சங்கத்தை நிறுவி அறிஞர் பெருமக்களையும், பெரியோர்களையும் திரட்டி அருட்பொழிவு செய்வித்தும், அரசியல் பெருமக்கள் எண்ணத்தை ஈர்த்து அவர்கள் தலையிட்டு நிறுத்த வேண்டியும், நீதித் துறையில் வழக்குத் தொடுத்துத் தடை பிறப்பிக்கவும் - வேண்டும் ஏற்பாடுகளை யெல்லாம் முன்னின்று முனைப்பாகச் செய்தார் திருவரங்கர். அதற்குப் பெறலருந் துணையாக அவர்தம் இளவல் சுப்பையா திகழ்ந்தார். இவ் வரும்பெறல் மணிகளைத் தம் திருவயிற்றுத் தாங்கிய பேறு பெற்ற சுந்தரத்தம்மையாரும் இக் கொடுமையை ஒழித்தலில் பேரூக்கம் காட்டினார். தமிழகத்து அருளிரக்கச் சான்றோர்களும் உறுதுணையாக நின்றனர். அக் கொடும் பலி நிறுத்தப்பெற்றது! அரங்கர் கால்லா விரதம் குவலய மெல்லாம் ஓங்க” விரும்பிய பெருமகன் தாயுமானவர் வழி நிற்கும் திருப் பெருந் தொண்டராகத் திகழ்ந்து பலர்புகழ் பாராட்டுக்கு உரியவர் ஆனார். பலியிட விழைந்து வெறியொடு நிற்பார்க்கு இத் தடை வெறுப்பையன்றோ விளைக்கும்? அவ் வறுப்பு முனைந்து தாக்கவும் அஞ்சுமோ? அவ் வெதிர்ப்புக் கெல்லாம் அஞ்சாத அடலேறாக அரங்கர் பணி செய்தது அருளிரக்கச் சான்றுதலுடன் அவர்தம் ஆண்டகைமைச் சான்றாகவும் அமைந்தது!

66

பலி வெறியர் அரங்கரைக் கொல்லவும் சூழ்ந்தனராம்! ஆனால், கொல்லுதலைக் கொல்லுதலே குறியாகக் கொண்ட அரங்கர் அஞ்சி ஒதுங்குவரோ? அடலேறாக நின்றார். அரிய துணைகளையும் சேர்த்துக் கொண்டார். அருளுரை’ வழங்குதற்கு அந் நாளிலேயே, இந் நாள் அருண்மொழி அரசு கிருபானந்தவாரியாரை முதற்கண் நெல்லைப் பகுதிக்கு அழைத்துப் பன்னிரு நாள்கள் பொழிவு நடாத்த ஏற்பாடு செய்தார். உயிரிரக்கக் கோட்பாட்டையே உயிர்ப்பாகக் கொண்ட பெருமகன் திருபால் (ஸ்ரீபால்) அவர்களையும், சிவனெறித் தொண்டில் சிந்தையைப் பறிகொடுத்துத் தம்மை ஆளாக்கிக்கொண்ட காரைக்குடிப் பெருமகனார் அரு. சோமசுந்தரனார் முதலியவர்களையும் அடுத்தும் தொடுத்தும்