உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

இளங்குமரனார் தமிழ்வளம் - 26

உரையாற்ற ஏற்பாடு செய்தார். பொழிவு கேட்ட அருளுளத்தர் உருகி நின்று உயிர்ப்பலி ஒழிக்க உதவினர். கல்லுள்ளம் வாய்ந்தவரும் அரங்கரின் கலங்காத் துணிவு கண்டு அஞ்சி அகன்றனர். ஆகலான், அரங்கரின் அருளும் ஆண்மையும் உயிர்ப்பலி விலக்குப் பணியால் ஒருங்கே விளங்குவதாயிற்று. உயிர் காத்த அத்தகு திறத்தைத்தானே ‘கருணை மறம்' என்றார் இளங்கோவடிகளார்; அதனைத்தானே 'பெருந்தகை மறம்' என்றார் புறநானூற்றார். தொண்டின் தளமே உயிரிரக்கமே யன்றோ! உயிரிரக்கம் இல்லா ஒன்று தொண்டும் ஆகுமோ? அருள் தொண்டர் அரங்கர் புகழ் வாழ்க.