உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. காதல் நோன்பு

“வினையே ஆடவர்க்கு உயிர்" என்றார் சங்கச் சான்றோர் ஒருவர். அதனை அடுத்தே, “மனையுறை மகளிர்க்குக் கற்புச் சிறந்தன்று” என்றும் கூறினார். திருவரங்கர் கழகப்பணிகளிலும் பொதுப்பணிகளிலும் முழுதுற அழுந்தி நின்றார்! அவர்தம் ஆழத்தின் ஆழத்தில் பதிந்திருந்த நீலாம்பிகையார் காதல் தடைக்குக், காலத்தால் வாய்த்த மருந்தாகக் கடமைகள் அமைந்தன. அதனால் உண்மைக் காதலை-உயிர்க் காதலை- மறந்தார் என்பது இல்லை! உயிர்க் காதலை மறக்கவும் கூடுமோ? அது மறக்கவும் விடுமோ? 'வழுக்கி வீழினும் சொல்லு நா நமச்சிவாயவே' என்னும் தெய்வப் பேரன்பின் ஊற்றிடமே காதல் தானே! அக் காதல் வயப்பட்டார்க்கு அதனை மறக்கவும் இயல்வதோ? ஆனால், வணங்கத்தக்க பெண்பிறப்பாய், வீட்டளவில் அடங்கிவிட்ட அமைதிப்பிறப்பாய், சமயச் சால்பில் தோய்ந்த அறிவு நல நங்கையாய்த் திகழும் நீலாம்பிகையார்க்கு, அரங்கர்க்கு வாய்த்தவாறு, தாங்கமாட்டாக் கடமைகளைத் தலைமேல் அள்ளிப் போட்டுக்கொள்ள வாய்ப்பு இல்லையே! என் செய்வார்? அனலிடைப் புழுவெனத் துடிப்பதை அன்றி ஆற்றும்வகை ஒன்றும் அவர்க்கு உண்டோ? அரங்கரை நினைந்து நினைந்து உருகினார்! உள்ளத்து உருக்கம் வாளா ஒழியுமோ? லை உருக்கிற்று! நோயைப் பெருக்கிற்று! பல்கால் நோய்ப்படுக்கையிலும் வைத்தது! பெண்மைப் பெருங்கனி

என்செய்வார்! என்செய்வார்!

க்

நீலாம்பிகையார் நிலைமை வீட் ை L

L

அமைதியில் வைக்குமோ? பெற்ற அன்னையின் உள்ளத்தைப் பெரும்பாடு படுத்தியது. உடன் பிறந்தார் உள்ளத்தைக் கரைத்தது. அடி களாரையும் அசைத்தது. எதற்கும் மலையாத மலையும், மகளின் நிலைகண்டு சொல்லொண்ணா உருக்கத்தில் சோர்ந்தது. உடல் நோயைத் தீர்க்கும் அளவில் ஒழிந்து போவதோ நீலா கொண்ட உளநோய்! ‘பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை, தன்னோய்க்குத் தானே மருந்து' என்பது இருபால் பொதுமை இயம்பும் குறள்மணி என்பதை அறியாதவரோ அடிகள்! அவர் கழகநாள் காதலர்