உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

இளங்குமரனார் தமிழ்வளம் – 26

தாமே

நிலையைக் கனிந்து கனிந்து பொழிந்தும், எண்ணி எண்ணி எழுதியும் போற்றுபவர் அல்லரோ! தம் மகளார் காதல் வாழ்வுக்கு கருத்தொத்த இனிய வாழ்வுக்குத் குறுக்கீடாக இருக்க நேர்ந்தததை விரும்புவரோ? உள்ளத்தின் கூத்தாட்டம் ஒருவரையும் விட்டொழியாது போலும்! அதற்கு அடிகள் என்ன? அன்பர் என்ன? அறிந்தார் என்ன? அறிவறியார் என்ன?

அரங்கர் - அம்பிகை’ திருமணம் தடைப்பட்டு நின்றது! நிகழுமா? நிகழாதா? என்ற ஐயமும் கிளைத்தது! ஆண்டுகள் நீள நீள நிகழாது என்ற முடிவுக்கே வந்தாரும் பலர். இத் திருமணம் இடையறவுபட்ட செய்தியை அறிந்து வருந்தினவருள் தலையாய ஒருவர் கொழும்புச் செந்திலாறுமுகனார். அவர் தாமே திருவரங்கருக்கு நீலாம்பிகையை முதற்கண் நினைவுறுத்தித் 'திருவுள்ளத்தில் அழகொழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிரோவிய' மாக்கி வைத்தவர். கருத்தொத்த காதல் வாழ்வில் கனிந்து ளங்கிய ஆறுமுகனார் தம் மனைவியொடும் 10-1-1923இல் பல்லாவரத்திற்கு வந்து சேர்ந்தார்.

அடிகள்மேல் மட்டற்ற மதிப்பும், பேரன்பும், அடித் தொண்டும், உடையவர்தாம் செந்திலார். எனினும் தாம் வந்துள்ள பணியைக் கருத, அவர் முதன்மையானவர் அன்றோ. அரங்கர் அம்பிகை திருமணத்தின் முதன்மையர் அரங்கரும் அம்பிகையும் தாமே! அவ்விருவர் உட்கிடையை உள்ளவாறு அறிந்தபின்னர் அன்றோ அதன் நிறைவேறல் குறித்துச் சூழ வேண்டும்? ஆகலின் அம்பிகையின் கருத்தறிய அவாவினார். அதற்கு வாய்த்த துணையொடுதாமே வந்துள்ளார்? ஆகலின், ஆறுமுகர் அன்புத் துணைவி பிரமு அம்மையார் வாய்த்த பொழுதில் அம்பிகையைக் கண்டு தனியே உசாவினார்.

கேள் உரைத்துக் கிளையுரைத்துக் கேட்டதுரைத்துச் செய்திக்கு வந்தார். நெஞ்சத்துள்ளதன்றோ வாய் பேசும்! அதிலும், உண்மையன்பினர் உயிரன்பினர் முன்னே உள்ளம் ஊற்றுக் கண்திறந்து மடைபாயும் வெள்ளமெனப் பொழியத் தவறாதே! ஆகலின், 'மணந்தால் அரங்கரை மணப்பது;

ல்லையே மணமின்றியே கழிப்பது; என்று அரங்கரைத் தலைவராக ஏற்றுக் கொண்டு என்னைத் தந்தேனோ அன்றே எங்கள் உள்ளமறிந்த திருமணம் நிகழ்ந்துவிட்டது; இன்னொரு வர்க்கு என் நெஞ்சில் இடனென்பது எள்ளளவும் இன்று; அரங்கரும் என்னில் தாழாத ஏற்றத்தோடும் ஏக்கத்தோடும்