உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

61

وو

என்னையே யடைய என்றுங் காத்திருப்பார்! எங்கள் இருவரும் உள்ளத்தின் உள்ளமும், உயிரின் உயிரும் இவ்வுண்மை அறியும்’ என்று கூறி விம்மி விம்மி அழுதார்! அம்பிகையொடு சேர்ந்து பிரமு அம்மையும் அழுதார்!

و,

காதலர் அழுகை எளிதாய் ஒழிவதோ? "அல்லல் பட்டு ஆற்றாதார் அழுமையே, செல்வத்தைத் தேய்க்கும் படை என்றார் காதலர் அழுகை கற்கோட்டையையும் உடைக்கும்; இரும்புக் கதவையும் துளைக்கும்; காவல் கூற்றையும் தகர்க்கும்; விண்ணையும் மண்ணையும் ஊடுருவும்; பிளக்கமாட்டாத மலையையும் பிளக்கும்; அணுவையும் அணுவுள் அணுவையும் நொறுக்கிப் பதம் பார்க்கும்; உயிரோத்த காதலைத் தடுத்து நிறுத்த ஒருவர் உலகில் பிறந்ததும் உண்டோ? அதிலும் அறிவறிந்த அடிகளோ, ஆரா அன்பினை மகள்மேல் கொண்டு அடிகளோ, முழுதுற தடையாய் என்றும் இருப்பார்? இளக்க மிக்க அந்த மலையினிடம் இரக்கம் என்னும் ஊற்றுக் கண் அடைபட்டுப் போய்விடமுடியாதே! திருக்கோவையையும், தேவார திருவாசகங்களையும் சங்கச் சான்றோர் அகப்பாடல் களையும், கேட்போர் கண்ணீர் வடித்துக் கரைந்தழ இசைத்து விளக்கும் அவ்வடிகளால் கடுங்கற்பாறையாய் என்றும் நின்றுவிட முடியுமோ?" என இன்னவாறாகச் செந்திலாரும் அவர் தம் துணைவியாரும் எண்ணினர். உள்ளார்ந்த அன்பால் ‘அரங்கர் - அம்பிகை திருமணம்' விரைவில் நிறைவேறுக! என்று இறையருளை வேண்டிக்கொண்டு பல்லாவரத்தில் இருந்தும் பாளையங்கோட்டைக்கு வந்தெய்தினர். 'அம்பிகை பாகன்'

அங்கன்றோ இருக்கிறார்!

டு

அரங்கர் கழகப் பணியிலும், பொதுத் தொண்டிலும் பொழுதையெல்லாம் செலவிட்டுப் பிறிதொரு கருத்துக்கு டந்தராமல் வாழ்ந்தார். திருமணம் என்பதுபற்றி நண்பர்கள் அன்பர்கள் வாய்களுக்கும் தடையிட்டுக் காத்தார். ஆனால், எளிதில் காத்து நிறுத்தவோ, தடையிட்டு நிறுத்தவோ இயலாத- பெற்ற பெருமகளார் சுந்தரத்தம்மையார்-முயற்சிகளுக்கு என்செய்வார்! தம் பிள்ளை பிறர்போல மணங்கொண்டு மக்களொடு விளங்க எத்தாயர் தாம் விரும்பார்? அதிலும் பல்லாற்றானும் பாராட்டத்தக்க சீர்மைகளெல்லாம் சிறக்க அமைந்த திருவரங்கராம் தம் செல்வர்க்குப் பலப்பல செல்வர்களும் செழுங்கிளைகளும் அறிவுமிக்காரும் பெண்தர அடுத்தடுத்துப் படைபடையாய் வரும்போது பெற்ற தாயின்

ம்