உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

இளங்குமரனார் தமிழ்வளம் - 26

அடிகளார் மெல்லுள்ளம் கரைந்தது; அரங்கர் அம்பிகை காதல் நோன்புக்கு உருகியது. “நீலா, உங்கள் திருமணத்தை யான் தடுக்கவில்லை; நம் வீட்டில் என் முன்னிலையில் உங்கள் திருமணம் நிகழ இயலாது. நீயும் உன் காதலரும் வேறிடத்தில் திருமணத்தை நிகழ்த்திக் கொள்ளுங்கள்; யான் அதற்கு வரமாட்டேன்; ஆனால் உன் தாயும் உடன்பிறந்தாரும் உங்கள் திருமணத்தில் கலந்துகொள்ள வேண்டுவனவெல்லாம் செய்வேன். அணிகலன்களும், திருமணச் செலவுக்கும் பொறுப் பேற்றுக் கொள்வேன்” என்று பல்கால் வலியுறுத்தினார். இத் திட்டத்தை அறிவறிந்த அம்பிகை ஏற்பரோ? அரங்கர்தாம்

ஏற்றுக்கொள்வரோ?

காதல் கடைப்பிடியில் அழுந்தி நிற்கும் பிறராயின் உடன் போக்கும் கொள்ளுதல் புதுமை அன்றோ! பதிவு மணத்தைக் கொள்ளுதற்கும் துணிவர் அன்றோ! பெற்ற தந்தையார் இருந்து காடுக்கவும் கொண்டு சிறக்கவும் அல்லாமல் உணர்ச்சியால் ஒன்று செய்யத் துணியாமை காதல் வயப்பட்டார்க்கு அரிதினும் அரிதாம் செய்கையாம். அரங்கர் அம்பிகை காதல் அருமை, அடிகளார் முன்னின்று நடத்தாமல் நடத்தாமல் ஏற்றுக்கொள்ளாத தெய்வக் காதலாய் இலங்கியதாம்!

அரங்கர் சென்னைக்கு வரும்போது ஓரிரு வேளைகளில் அம்பிகையார் பணி செய்யும் கல்லூரிக்கு வந்து கண்டது உண்டு. காதல் கிழமையை விளக்கிக் காலம் கட்டாயம் வந்தே தீரும் என்று கனிந்து நின்றதும் உண்டு! அக் காட்சிக்கும் உரையாட்டுக்கும், அடிகளார் அறியினும் தடைப்படுத்தியதும் இல்லை! அவர்கள் உயிர்க் காதலை ஊட்டி வளர்த்ததில் அடிகளார்க்குப் பங்கில்லை என்று அவர்தம் மனச்சான்றும் இடித்துக் கூறாமல் விடுமோ? இல்லையேல் அவர்களே விரும்பு மாறு மணந்து கொள்ள இசைவும் தந்திருப்பரோ?

ஆண்டுகள் ஒன்றோ’ இரண்டா’ கடந்தன? ஒன்ப தாண்டுகள் கடந்தன! ஒருநாள் ஓராண்டாய்த் துயர் தந்து ஒன்பதாண்டுகள் உருண்ட ன. இடை டையே அரங்கரின் இளவல் சென்னைக் கழக முகவர் சுப்பையா பிள்ளை பல்லாவரம் வருவார். அடிகளைக் காண்பார்; கலந்துரையாடுவார்; அரங் கருக்காக அடிகளாரிடம் பேசாத் தூதராக வந்து செல்வார்; அடிகளாரிடம் வேண்டிக் கட்டுரைகள் பெறுவார்; செல்வியில்

L