உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

65

செழிப்புறுத்துவார்; அடிகளார் பொழிவுக் குறிப்பு களை வெளியிட்டுச் சிறப்பிப்பார்; அவர்தம் தொண்டுக்கு அரணாக அமைவார். அடிகளார் உவப்புறத் தம் அன்பினை யெல்லாம் ஒருங்கு பொழிந்து அணுக்கத் தொண்டராய்த் திகழ்வார்! அடிகள் உள்ளம் படிப்படியே மாறி வருவதை உணர்ந்து மகிழ்வார்! அம் மகிழ்ச்சி நிலைபெறும் நாளும் வந்தது.

ஒருநாள் சுப்பையாபிள்ளை, 'தமிழ்க்காசு' என்னும் கா. சுப்பிரமணியபிள்ளை அவர்களுடன் பல்லாவரத்திற்கு வந்தார். வந்தது எதற்காக? ‘அரங்கர் அம்பிகை’ திருமணத்திற் காகவே என்பது வெளிப்படை. அடிகளார் உருகினார்; உள்ளார இசைத்தார்; பிரிந்தவர் கூடும் பெருவாய்ப்பினை உன்னி இருபாலும் இன்பந் தவழ்ந்தது. 'பருவத்தால் அன்றிப் பழா' என்பதுபோல் உரிய பருவம் அன்றே போலும்!

அடிகளார் இசைவினை அரங்கர் அறிந்தார். தம்பியருடன் பல்லாவரத்தை அடைந்தார். அடிகளாரை வணங்கி வாழ்த்துப் பெற்றார். அம்பிகையார் தம் நோன்பு கைகூடிய மகிழ்ச்சியில் தவழ்ந்தார். வீடு அன்றே மணக்கோலத்தில் மகிழ்ந்தது.