உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. பெண்ணின் நல்லாளொடும்

பெருந்தகை

அரங்கர் அம்பிகை திருமணம் 2-9-1927ஆம் நாள் சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயிலில் நிகழ்ந்தது. அடிகள் அம்பிகையாரைப் கொடுப்ப அரங்கர் “பெண்ணின் நல்லா ளொடும் பெருந்தகைக் கோலம் கொண்டு” திகழ்ந்தார். மண வாழ்த்துகள் நிறைந்தன. கூடிய பெருந்திருவினர் எத்தகையர்?

மறைமலையடிகளார் மகளார் திருமணமாயிற்றே! அறிவறிந்த மெல்லியல் நங்கை பல்கலைப் பாவை அம்பிகை திருமணமாயிற்றே! கழக அமைச்சர் கன்னித் தமிழ்த் தொண்டர், சிவநெறிக் குரிசில், புலவர் தோழர் திருவரங்கர் திருமணமாயிற்றே! எத்தகைய பெருந்தக்கார் குழுமியிருப்பர்? வாழ்த்தியிருப்பர்?

.

திரு. வி. க., மணி,

பேரறிஞர் கா. சு. பிள்ளை; பொறியியற் செல்வர் பா. வே. மாணிக்கநாயகர்; தமிழ்த்தென்றல் திருநாவுக்கரசர்; பெரும்புலவர் கா. நமச்சிவாயர்; சைவப்புலவர் ச. சச்சிதானந்தர்; பாரிப்பாக்கம் கண்ணப்பர், இசைவேந்தர் சாம்பமூர்த்தியார்; நெல்லை சா. சுந்தர ஓதுவாமூர்த்திகள்; பரலி சு. நெல்லையப்பர்; செந்தில் ஆறுமுகனார்; பெரும்புலவர் இ. மு. சு. இன்னபல அறிஞர்களும், கலைச் செல்வர்களும் பொது மக்களும் குழுமியிருந்தனர். அரங்கனார் கழக அமைச்சர் அல்லரோ! அந்நாளில் கழகம் இருந்த இலிங்கிச் செட்டித் தெருவில் அமைந்ததொரு மாளிகையில் மணமகனார் வீட்டு அழைப்பும், மறுநாள் பல்லாவரத்தில் அடிகளார் மாளிகையில் மருவீட்டு அழைப்பும் நிகழ்ந்தன. இரண்டு நாள்களும் இசையரங்கும் விழாவும் இனிது சிறந்தன. வள்ளி திருமணம் என்னும் சைக்காதையைச் சுந்தர ஓதுவாமூர்த்திகள்

நிகழ்த்தினார்.

அரங்கர் அம்பிகை இல்லறம் பாளையங்கோட்டையில் தொடங்கியது. அருமை அன்னையாரின் முதுமைக்கு ஏந்தான