உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

67

இனிய மருமகளைப் பெற்று இன்பப் பெருக்கானார்! அவர் நாளெல்லாம் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நல்ல நிகழ்ச்சி நடந்துவிட்டதே! இளையவராக இருந்தாலும் மூத்தவர் மணம் செய்தற்கு முழுத்துணையாய் நின்று வெற்றிகண்ட இளையவர் வ. சு. வின் மகிழ்ச்சிக்குக் கரையுண்டோ? மறைமலையடி முதல் அவர் தம் பெரிய குடும்பத்தவர்க்குத்தான் என்ன மகிழ்ச்சிக் குறைவு? தடைப்பட்ட ஒன்று நிறைவேறுங்கால் எய்தும் இன்பத்திற்கு எல்லை என்பதொன்று ஏது?

அறிவறிந்த அரங்கர் பெண்மைநலங் கனிந்த அம்பி அம்பிகை ஆகிய இவர்கள் இல்வாழ்க்கை எத்தகையதாக இருக்கும்? அம்பிகை உடன்பிறந்தாரும், அரங்கர் மைத்துனரும் ஆகிய மறை. திருநாவுக்கரசர் தன் அக்கை அத்தான் இல்லறச் சிறப்பை எடுத்துரைப்பதை அப்படியே பெய்தல் சாலும்! ஏனெனில், இருபாலும் இணைந்து கண்டும் ஊடாடி இருந்தும் உறவாடி மகிழ்ந்தும் எழுதியது ஆயிற்றே! கருதுகோளினும் காட்சி யுரையன்றோ கவின்மிக்கது!

66

'அம்மையாரும் அரங்கனாரும் பண்டைத் தண்டமிழ் இலக்கியங்களிற் கண்ட தலைவர் தலைவியரென வாழ்ந்தனர். திருவள்ளுவர் கூறிய வாழ்க்கைத் துணைநலம்பற்றிய பொருளுரைக்கோர் எடுத்துக்காட்டென அம்மையார் விளங்கி னார். அரங்கனாரும் அம்மையாரும் ஒருவர் மற்றவர்க்கென்றே அழகிற்றிகழ்ந்தனர்; அன்பிற் சிறந்தனர்; அருளில் வாழ்ந்தனர். இருவரும் ஓருயிராய் நின்று கடவுட் போற்றியும் சுற்றத் தாங்கியும் விருந்து புரந்தும் இல்லறத்தை நல்லறமாக நடத்தினர். தம் வாழ்க்கையின் பயன் செந்தமிழ் வளர்த்தலும் சிவநெறி பரப்பலும் என்றே கொண்டு அவற்றினுக்காக இடையீடின்றிப் பணியாற்றி வந்தனர். அவர் தம் அன்பு வாழ்க்கையைக் கண்டார் எல்லாரும் ‘இவரனைய இல்லறத் துணைவரை நூல்களில் கேட்டோம்; இன்றோ, நேரிற் காணும் பேறு பெற்றோம்' என மகிழ்ந்தனர்.

"அம்மையார் அரங்கனாரை மணந்தபின் தமிழாசிரியர் வேலையை விடுத்துப் பாளையங்கோட்டையிலுள்ள தம் கணவனார் இல்லத்தில் 1928ஆம் ஆண்டுமுதல் வாழலானார். சற்றேறக்குறைய ஆண்டுக்கொரு குழந்தையாகப் பதினோரு மக்களை ஈன்றார். அவற்றில் பெண்மக்கள் எண்மர்; ஆண்மக்கள்