உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

இளங்குமரனார் தமிழ்வளம் - 26

மூவர். மக்களைப் போற்றி அன்புடன் வளர்ப்பதில் அம்மையார் இணையற்றவர் என்றே இயம்பலாம். குழந்தைகள் செய்யும் குறும்பும் தொல்லைகளும் அவர்க்குப் பேரின்பம். அவைகளை வையவோ அடிக்கவோ அவர் மனம் இடந்தராது. 'இத்தனை குழந்தைகள் எற்றுக்கு? இவைகளால் துன்பமே' என்று உலகவர் நினைப்பர். அம்மையாரைக் கேட்டால், இன்னும் எனக்குக் குழந்தைகள் வேண்டுமென்றே கூறுவார்; கூறியும் இருக்கிறார். அம்மையார் வாழ்க்கை துன்பக் கடலென்றே கூறிவிட கூறிவிடலாம். அதில் அவர் பெற்ற இன்பப் பெரும்புனை மூன்று! அவையாவன : 1. சிவன் பணியும் செந்தமிழ் வளர்ப்பும்.

2. ஆருயிர்க் கணவர்.

3. மக்கள்.

“தம்மக்களைக் காண்டொறும் காண்டொறும் அளவிலா இன்பமுற்று அம்மையார் ‘என்பெருஞ்செல்வம் இவைகளே' என்றும், சிவபிரான் எனக்களித்த அருள் வடிவங்களே இவைகள்' என்றும் அகமும் முகமும் ஒருங்கே மலர்ந்து மகிழ்ந்தார்.

“1920 இல் அம்மையாரைப் பீடித்த இளைப்பிருமல் நோய் 1930 வரையில் இடையிடையே வருத்திவந்தது. அதுகண்டு மிக வருந்திய திருவரங்கனார் நோய் நீக்கத்திற்கென்று செய்த முயற்சிகள் எழுத்திலடங்கா. திருவரங்கனாரின் அருமை நண்பர் திரு. கீழப்பாடம் பிச்சாண்டியா பிள்ளை என்னும் தமிழ் மருத்துவர் அன்பும் அருளும் உருக்கமும் கொண்டு அருமருந்துகள் பலவற்றை வருந்திச் செய்து அம்மையார்க்களிப்ப, நோய் நீங்கினார். நன்றியுணர்வு மிகுந்த அம்மையார் பிச்சாண்டியா பிள்ளையின் பேரன்பைப் போற்றும் வகையில் தாமெழுதிய நூல் ஒன்றை அவர் நினைவாக வெளியிட்டும், தம் மக்களில் ஒருத்திக்குப் 'பிச்சம்மை' என்று பெயரிட்டும் மகிழ்ந்தார். அம்மையாரைத் துன்புறுத்திவந்த நோய் ஒழிந்ததெனினும் இரவிலும் விழித்துப் ழித்துப் பிள் பிள்ளைகளைப் பேணுதலினாலும் இதனால் நேர்ந்த மெலிவினாலும் அம்மையார் எப்போதும் நலிந்தவராகவே இருந்தார். கணவனார், அம்மையார் நலத்திலேயே நாட்டஞ் செலுத்திக் கவலையில் ஆழ்ந்திருந்தார். இந் நிலையிலும் தம் அன்பு என்னும் அமுதத்தால் இருவரும் உலகத் துன்பத்தை மறந்து ன்புற்றே வாழ்ந்தனர்.” (நீலாம்பிகையார் வரலாற்றுச் சுருக்கம் 8 - 9)