உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

14-11-1928இல்

அடிகளார் திருவரங்கருக்கு

69

எழுதிய

கடிதத்தில் நீலாம்பிகையார் பெற்றெடுத்த முதல் மகவைப்பற்றிய செய்திகளை எழுதிப் பூரிப்படைகிறார்! அடிகளாரைத் தாத்தா வாக்கப் பிறந்த முதற்குழந்தையன்றோ அது!

ஓம் சிவம்

பல்லாவரம்,

14 - 11 - 1928.

அன்புமிக்க திருவாளர் திருவரங்கம் பிள்ளையவர்கட்குத் திருவருளால் எல்லா நலங்களும் உண்டாகுக.....

நுங்கள் மகவு யாருடைய வடிவை ஒத்திருக்கின்றது? கறுப்பா? சிவப்பா? குள்ளமா? நீளமா? நீலா, பிள்ளைக்குப் பால் காடுப்பது நல்லது. மீனாட்சிக்கு அவ்வூர் பிடித்திருப்பதும் செல்வம் லோகநாதனுக்கு உடம்பு நலமெய்தி வருவதும் மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தன. நீலாளுடைய உடம்பைப் பாதுகாப்பதில் உங்கட்கே மிகுந்த கருத்திருத்தலால், யான் அதைப்பற்றி மிகுதியாய்ச் சொல்ல வேண்டியதில்லை. குழந்தைக்குப் பசியெடுக்கும் காலத் தன்றி மற்றைக் காலங்களிற் பாலூட்டுதல் ஆகாது. குழந்தைக்கும் தாய்க்கும் தலை முழுக்குச் செய்விப்பது காலமும் உடம்பின் நிலையும் அறிந்து செய்தல் வேண்டும். நீலாவுக்கு சத்தான உணவு செரிக்கும் அளவிற் கொடுத்தல் வேண்டும். எல்லார்க்கும் எங்கள் அன்பைத் தெரிவியுங்கள். நலம். நுங்கள் எல்லீர் நலமுங் கோரித் திருவருளை இடையறாது வழுத்தும்

அன்புள்ள,

மறைமலையடிகள்.

1928 நவம்பரில் மகப் பெற்றுத் தாயான அம்பிகையார் அதற்கு முன் திங்களில் (அக்டோபர் 1928) ‘காரைக்கால் அம்மையார்’ என்னும் இனிய நூன் மகவொன்றைப் பெற்று அடிகளார் முன்னர் முகங் காட்டச் செய்து, அவர் தம் வனப்புறுத்தலைப் பெற்றுப் பொலிவுறுத்தித் தமிழ் உலகில் தவழ விடுதற்குரிய அரும் பேற்றைப் பெற்றிருந்தார். 6-10-1928இல் அடிகளார் அரங்கருக்கு எழுதினார் : "நேற்றுமுதல் நீலா எழுதின காரைக்காலம்மையார் வரலாற்றினைப் பார்த்துத் திருத்தி வருகின்றேன். தமிழ்நடை இனிதாயிருக்கின்றது. பிழைகள் மிகுதியாய் இல்லை; சில நுட்பச் சீர் திருத்தங்களே