உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

இளங்குமரனார் தமிழ்வளம் - 26

.

செய்யப்பட்டு வருகின்றன. திருத்திய படியை நீலா பார்த்தபின் அச்சுக்குக் கொடுத்தலே நலம் காடுத்தலே நலம்" என்பது நீலாம்பிகையார் பெற்றெடுத்த நூன் மகவைப்பற்றி அடிகளார் நுவன்ற செய்தி.

ஏறக்குறைய ஆண்டுக்கொரு குழந்தையாய் அம்பிகையார் பெற்றெடுத்தாலும், அதற்குத் தாழாமல் நூற் குழந்தைகளையும் பெற்றுத் தந்துகொண்டேயிருந்தார். எடுத்த எடுப்பிலேயே வடசொற்றமிழ் அகர வரிசை கண்டவர், அடிகளாராலேயே ‘தமிழ் நடை இனிதாயிருக்கின்றது' என்று பாராட்டும் பேறு பெற்றவர், கல்லூரியில் தமிழ் பயிற்றும் கடனைத் துறந்து கணவருக்குத் துணையாய், நூற்பதிப்புக் கழகத்திற்கு இணைத் தொண்டராய் இலங்கியவர், தொடர்ந்து நூன் மகவுகளைப் பெறுதலில் வியப்பில்லையே!

அம்பிகையார் 1917, 1918ஆம் ஆண்டுகளிலேயே தமிழ்க் கட்டுரைகள் எழுதத் தொடங்கிவிட்டார். அப்பொழுது அவர் அகவை 14, 15. திராவிடன், தேசாபிமானி, ஆனந்த போதினி, ஒற்றுமை, தமிழ்நாடு முதலான இதழ்களில் எழுதினார். அவற்றைத் தொகுத்துத் தம் திருமணத்திற்கு முன்னரே பல்லாவரம் பொதுநிலைக் கழகச் சார்பில் 1925இல் நூலாக வெளியிட்டார். அக் கட்டுரைத் தொகுதியிலேயே அம்பிகை யாரின் புலமை நலம் பளிச்சிடுகின்றது.

கல்வியும் தாய்மாரும், ஒழுங்கான கல்வி, கற்றலிற் கேட்டலே நன்று, நாகரிகமும் மொழி வளர்ச்சியும், தனித்தமிழ்ப் பாதுகாப்பு, தமிழைப்பற்றிய வினாக்களுக்கு விடை, தமிழில் வடமொழி கலத்தல் ஆகாது, சென்னைப் பல்கலைக்கழகக் கட்டாயக் கல்வி, நாவலந் தீவின் L பழைய குடிகள், பெண்மக்களின் அறிவும் ஆண்மையும், உயிர் போன உடம்பை என் செய்வது? இறந்தோர் வீட்டிற்குச் செல்பவர்களும் அவ் வீட்டினரும், பெண் பாலார்க்கே கொல்லாமை முதன்மையாம், திருக்காளத்திக் காட்சி, சைவ மாதரும் சைவமும் என்னும் தலைப்புகளே நூலின் உட்கிடையைத் தெள்ளிதின் விளக்க வல்லதாம்.

66

“இக் க் கட்டுரைகளில் வடசொற்கள் மருந்துக்கும் அகப்படா; வடசொற் கலப்பால் தமிழ் தன் இனிமையும் தூய்மையும் இழத்தலை யான் முதன்முதல் அறிந்தது பின்வருமாறு” என்று தனித் தமிழ் இயக்கங் கண்ட செய்தியைத் தனித் தமிழ்க் கட்டுரைகளின் முகவுரையில் பொறிக்கின்றார் அம்பிகையார்.