உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

71

அடுத்த வெளியீடாக வருவது முப் பெண்மணிகள் வரலாறு என்பதாம். அஃது 1925இல் வெளிப்பட்டது. வெளியிட்டது பல்லாவரம் பொதுநிலைக் கழகமேயாம். அந் நூலில் காரைக்காலம்மையார் வரலாறு திலகவதியார் வரலாறு மங்கையர்க்கரசியார் வரலாறு ஆகிய மூன்றும் இடம் பெற்றுள. அவர்தம் இளைப்பிருமலை அகற்றியுதவிய மருத்துவவல்லார் பிச்சாண்டியா பிள்ளைக்கு அந் நூலைப் படையலாக்கு கின்றார்:

"சென்ற ஒன்பது ஆண்டுகளாக எனக்கு இருந்த இளைப்பிருமல் நோயை எல்லாம் வல்ல இறைவன் அருளால் தக்க மருந்துதவி நலப்படுத்திய தமிழ் மருத்துவமணி கீழைப் பாட்டம் திரு. சு. பிச்சாண்டியா பிள்ளையர்கட்கு என் உளமு வந்த நன்றிக்கு அறிகுறியாக இந்நூல் வெளியிடப்படுகிறது என்பது படையற் குறிப்பு.

وو

அதன் பின்னர்க், கண்ணப்பர் வரலாறும் திருக்காளத்திக் காட்சியும், ஆராய்ந்தெடுத்த அறுநூறு பழமொழிகளும் அவற்றிற்கேற்ற ஆங்கிலப் பழமொழிகளும், ஐரோப்பிய அருண்மாதர் இருவர், பட்டினத்தார் பாராட்டிய மூவர் என்பவை தொடர்கின்றன. திருவாசகம் சிவபுராணத்திற்குப் பொழிப்புரை குறிப்புரைகளும் காண்கிறார். இந் நூல்களில் பொதுளிய கருத்துகள் தனித்தமிழ் ஊற்றம் தருவதாய், மெய்யுணர்வு அறிவுறுத்துவதாய், சீர்திருத்தம் மேற்கொள்ளச் செய்வதாய், மகளிர் நலமும் முன்னேற்றமும் வலியுறுத்துவதாய் அமைந்துள்ளன.

66

அடிப்படை நன்றாகப் போடாத கடைக்காலின் மேல் பெரிய கட்டிடம் நில்லாதது போன்று தாய்மொழிக் கல்வியாகிய அடிப்படை இல்லாத நம் மாணவர் மாணவி களுக்கு மற்றக் கல்விகளாலாம் பயனளிப்பதும் மிக அரிதாய் இருக்கின்றது.

"தாய்மொழிக் கல்வி நன்கு பயிலாத மாணவர் மாணவி களுக்கு மொழிப்பற்றும் நாட்டுப்பற்றும் உண்டாகா. மற்ற எம் மொழியையும் அவர்களாற் பயனுறப் பயிலவும் முடியாது.

“பட்டம் பெற்ற தமிழ் மாணவர் ஒருவர் எழுதிய கார்டு என்னும் ஓர் அட்டைக் கடிதத்தில் இருபத்தைந்து பிழைகளை இருக்கக் கண்டு மிகவும் வியப்புற்று மனம் வருந்தினேன்.