உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

இளங்குமரனார் தமிழ்வளம் - 26

"தமிழ்ப் பிள்ளைகளுக்கு நம் அருமைத் தாய்மொழியாகிய தமிழைப் பள்ளிக்கூடங்களில் இன்னுங் கட்டாயப் பாடமாக வைக்கப் பெறாத நிலையில் வடநாட்டு மொழியாகிய இந்தியைக் கட்டாயப் பாடமாக்கலாமா?" இன்னவை பலவும் தமிழ் நலம் கருதிய தகவுரைகள்.

66

'ஒரு நாட்டு மாதரின் முன்னேற்றத்திற்கு மற்றொரு நாட்டு மாதரின் முன்னேற்றம் தூண்டுகோலாகவும் இருக்கும் என்பது ஒருதலை” என்று மேனாட்டு மகளிர் வரலாற்றைத் தமிழ்நாட்டு மாதர்க்குப் படைக்கின்றார் நீலாம்பிகையார். நம் நாட்டு மகளிர் கொள்ளத்தக்க கடமைகளையும் சீர்திருத்தங்களையும் பல்கால் வலியுறுத்துகின்றார் :

66

மணமான பெண்மக்கள் தம் அருமைக் கணவன்மார் களின் வருவாய்க்கேற்ப வீண் செலவு செய்யாமல் தம் வீட்டு வேலைகளைத் தாமே ஒழுங்குபடப் பார்த்தும் ஓய்ந்த நேரங்களில் கல்வி கற்றும் தம் மக்களைப் பாதுகாத்தும் வந்தாற் போதுமே! எத்தனை பெண்மக்கள் தம் வீட்டு வேலைகளைப் பாராமல் ஆள் வைத்து வீட்டுக் குழந்தைகளையும் உன்னியாமல் படக்காட்சி பார்ப்பதற்கும் உலாவப் போவதற்கும் புறப்படுகின்றனர்! வெளியே நாளெல்லாம் உழைத்து ஓய்வு பெறும்பொருட்டுச் சாயங்கால வேளையில் ஆண்மக்கள் வீடு வரும்போது பெண்கள் சிலர் தம் இல்லக் கதவை அடைத்துப் பூட்டிவிட்டு வேடிக்கை பார்க்கப் போய்விடுகின்றனர். மணமான நம் தாய்மார்கள் இவ்வாறு நடப்பதைத் தவறென்று கூறி, அவர்கட்கு அறிவுறுத்தி அவர்கள் வீட்டு வேலைகளை ஒழுங்காகப் பார்க்கவும் எஞ்சிய நேரங்களில் அறிவுநூல் சமயநூல்களைக் கற்று மேன்மையடையுமாறும் செய்தலே நம்மவர் கடமையாகும்” (மேனாட்டுப் பெண்மகளிர் பக். 100) பக்100)

"செல்வநிலையில் வாழும் மாதர்களிற் பெரும்பாலார் சில குழந்தைகளே உடையராயினும் அக் குழந்தைகள் தொல்லையால் ஏதுஞ் செய்ய முடியவில்லை என்றும், நேரங் கிடைப்பதில்லை என்றுங் கூறி வாளாவிருந்து காலங் கழிக்கின்றனர். ஆனால் எலிசபெத் அம்மையாரோ ஒன்பது குழந்தைகளை வைத்துக் காண்டு அவர்களையும் தம் அருமைக் கணவரையும் கருத்துடன் அன்பாகப் பார்த்து வந்ததோடு அமையாமல் தாமிருந்த பிளாஷெட்டில் ஒரு பள்ளிக்கூடமும் மருத்துவச் சாலையும் வைத்து நடாத்தி வந்தமை பெரிதும் பாராட்டத் தக்கதன்றோ!