உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

73

“இவர் அண்டை அயலாரிடமும் அவர்தம் மக்களிடமும் மிகுந்த அன்பு காட்டும் இயல்பினர். இவருடைய இனிய குரலும் ன்சொல்லும் பிள்ளைகளை நன்றாய் வளர்க்கத் தெரியாத அக்காலத்தில் குழந்தைகளைக் கருத்தாய் வளர்க்கும் முறைகளை அவர் தம் தாய்மார்களுக்கு இவர் நன்கெடுத்துக் கூறிவந்தார்” (எலிசபெத் பிரை பெருமாட்டி)

வுரைமணிகள்

அம்பிகையார்தம்

இவ் உள்ளத்தில் உறைந்து உணர்வில் ஒன்றித் திகழ்ந்த கடைப்பிடிகள் என்பது விளங்கும். தம் வாழ்வை எடுத்துக்காட்டாக்க விழைந்தவர் அவர். எடுத்துக்காட்டே, ‘எடுத்துக்காட்டுபவராய் அமைந்து விடின் இரட்டுற மொழிதலாம் அணிநலம் பெறுதல் இயல்பேயன்றோ! 'எல்லாம் அவன் செயல்' 'திருவருளே வழி நடத்தும்' என்னும் கடைப்பாட்டில் அழுந்திய அம்பிகையார் இறையன்பு, கண்ணப்பர் வரலாற்றில் திரள்கின்றது. திருவாசகத்தில் பொதுளி நிற்கின்றது:

66

'இறைவன் அன்பு வடிவினன் ஆதலின் அவனை அன்பால் நினைந்து உருகுவார்க்கே அருள் செய்வான். மாசற்ற உள்ளத் தினின்றும் எழும் அன்பே இறைவனைக் காணும். உவர் நிலத்துப் பிறந்த நீர் பருகப் பயன்படாததுபோற் குற்றமுள்ள உள்ளத்தி னின்றும் எழும் விருப்பால் இறைவனைப் பெறுதல் இயலாது. நல்ல மணற்பாங்கில் ஊறுந் தீஞ்சுவைத் தண்ணீர் சிறிதானாலும் அது பருகுவார்க்கு விடாய் தணித்துப் பெருமகிழ்ச்சி தருதல் போல மனத்துக்கண் மாசு இல்லான் கொள்ளும் அன்பே அவனை தூயனாக்கி இறைவனுக்குப் பெருங்களிப்பைத் தரும் (கண்ணப்பர் வரலாறும் திருக்காளத்திக் காட்சியும்; முகவுரை)

و,

"நிலையில்லாதனவும் துன்பந்தருவனவுமான நினைவு சயல்களிற் கிடந்து உழலும் நாம் அவைகளினின்றும் டுபட்டு நிலைபெற்ற பேரின்ப வடிவினனாகிய எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை அடைவதற்குரிய வழிகளைக் காட்டும் தெய்வ அருள் நூல் (இத்) திருவாசகமே யாகும்" (சிவபுராணம்; முகவுரை)

ன்னபல உரைகளெல்லாம் நீலாம்பிகையார் பத்திமைப் பெருக்கையும், அதன் தோய்வையும் விளக்குவனவாம். இவ்வாறு பெண்ணுரிமை பேசப்படாத நாளில் உரிமையுற்ற பெண் மகளாய்த் திகழ்ந்து, பெண்ணுரிமையை ஆடவர் உரிமைக்கு மாறாக மாற்றாமல் அரவணைப்பாக்கி, சமயச் சால்பு என்பது