உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.

12. இனிய இரட்டையர்

திருவரங்கர் செயல்வீரர்! அவர் சொல்வது அரிது; எழுதுவது அதனினும் அரிது; மாநாடுகளில் பொழிவது நன்றியுரையா வரவேற்புரையா இவற்றைக் கூறுவதுகூட அரிது! ஆனால் ஓயாமல் ஒழியாமல் கடமையாற்றிக்கொண்டே இருப்பார். எத்தனை இடர் வந்தாலும், எத்தனை நோய் நலிந்தாலும் சோர்வென்பது எட்டுணையும் இன்றி என்கடன் பணிசெய்து கிடப்பதே என்று ஈடுபட்டிருப்பார்! அவர் எத்தனை எத்தனை அமைப்புகளைத் தோற்றுவித்துள்ளார்! எத்தனை எத்தனை மாநாடுகளைக் கூட்டிச் சிறப்பாக நடாத்தியுள்ளார்! எத்தனை எத்தனை பெருமக்களையெல்லாம் மேடையேற்றி மேன்மையுறுத்தி யுள்ளார்! எத்தனை எத்தனை அறிஞர் பெருமக்களை எழுத்தின் வேந்தர்களாய் எழிலுறுத்தி யுள்ளார்? எங்காவது தம் பெயரைக் காட்டிக் கொள்வாரா? மேடையில் முன்னின்று முகத்தை நீட்டிக் கொள்வாரா? மாநாட்டு ஓவியங்களில் அவர் ஒளிப்படத்தைக் காண இயலாது! மாநாட்டு நிகழ்ச்சி நிரலில் அவர் பெயரை எங்குத் தேடினும் காணக் கிடையாது! ஆனால் அனைத்தையும் தோற்றுவித்தும் நிலைபெறுத்தியும் நடாத்துவித்தும் எல்லாவற்றுக்கும் ஊடகமாக அவரே இருப்பார். புகழும் விரும்பாப் புகழ் வாழ்வு அது! பிள்ளைகளைப் பாராட்டும் வகையால், பெற்றோர் மகிழும் போல்வது அது! அவரின் பிறவி இயற்கையே இத்தகைய பெருமையில் பிறங்கிற்று என்க.

-

அன்பர்கள் ஆர்வலர்கள் அவரைப்பற்றி என்ன சொல்கி றார்கள்! எப்படி எப்படி யெல்லாம் பாராட்டி மகிழ்கிறார்கள்! எழுதி எழுதி ஏத்துகிறார்கள்! பாடிப் பாடிப் பூரிக்கிறார்கள்! அவரோ 'யாரையோ இவர்கள் சொல்கிறார்கள்’ என்று ஒதுங்கிப் போய்விடுகிறாரே! தமக்கென ஓரிதழ் போற்றுவார் போற்றும் புலமைப் புகழிதழ் - செந்தமிழ்ச் செல்வியாம் சீரிதழ் திங்களுக்கென்றாகத் தித்திக்கத் தித்திக்க வெளிப்பட்டும் தம் பெயரால் ஒரு கட்டுரை வெளியிட்டாரா? தாம் செய்த பொழிவையோ நன்றியுரையையோ வெளியிட்டாரா? எல்லாம்

ரு