உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

இளங்குமரனார் தமிழ்வளம் - 26

அமைதி! அமைச்சர் என்பதற்கே கடமை புரிந்து அமைந்து விடுபவர் என்று பொருள்கொண்டார் போலும்.

திருவரங்கர் குடும்பச் சூழலையும் தமிழ்ப்பற்றின் சிறப்பையும் நேரில் கண்ட ஆட்சிமொழிக் காவலர் திரு. கீ. இராமலிங்கனார் உரைக்கின்றார்:

"1938 இல் நான் பாளையங்கோட்டை L நகராட்சி ஆணையனாக மாற்றப்பெற்றதும் அந்நகரிலே அவர்களது இல்லத்தில் திரு. (வ.சு.) (வ.சு) பிள்ளையவர்களையும் அவர்கள் தமையனார் திரு. வ. திருவரங்கம் பிள்ளையவர்களையும் அடிக்கடி பார்த்து அளவளாவி அகமகிழ்வேன். 'வடசொல் தமிழ் அகரவரிசை' முதலிய பல அரிய நூல்களின் ஆசிரியரும் அருள்திரு மறைமலையடிகளார் திருமகளாருமான திருவாட்டி நீலாம்பிகை திருவரங்கம் அவர்களையும் அருமைக் குழந்தை களையும் கண்டு களிக்கும் பேறும் அங்கு எனக்குக் கிட்டிவந்தது. 'தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை' என்னும் தொடரை நினைவூட்டும் வகையில் திரு. பிள்ளையவர்கள் குடியிருந்த திருக்கோயிலான அகவை முதிர்ந்த அவர்களின் அன்னை பெருமாட்டியாரையும் அங்குச் சேவித்து அளவளாவி அகமுவப்பேன்.

66

அண்ணனாரும் தம்பியாரும் பல்வகையான தமிழ்ச் செய்திகளைத் திரட்டுவதிலும் பழந்தமிழ் நூல்களைச் சேகரிப்பதிலும் கொண்டிருந்த உந்தும் ஊக்கத்தை அப்போது நேரில் அறிவேன். திரு. வ. திருவரங்கம் பிள்ளையவர்களது சட்டையின் மூன்று பைகளிலும் கையெழுத்துத் தாள்களும் அச்சு ஏடுகளும் எப்போதும் அடைபட்டு இருப்பதைக் கண்டு வியப்பேன். சட்டைப் பைகள் அவர்கள் தமிழ்ப்பற்றினைப் போலவே பெரியனவாக இருந்தமையின் அவை கிடைத்தவற்றை யெல்லாம் கொள்ளும் தகையனவாய் இருந்தன.”

ஆட்சிமொழிக் காவலர் கண்ட காட்சி ஈதாக, சென்னை உயர்நீதிமன்ற நடுவர் நாவலர் திரு. மகாராசன் தாம் அரங்கரைக் கண்ட காட்சியை விளக்குகிறார்:

66

'சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தை நினைக்கும் போதெல்லாம் தங்கள் (திரு. வ.சு) தமையனார் திருவரங்கம் பிள்ளையவர்களுடைய உருவம் கண்ணுக்கு முன்வந்து நிற்கிறது. அவர்களை நான் முதன்முதலாகச் சந்தித்தது முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் பாளையங்கோட்டையில்

வழக்கறிஞனாக இருந்த காலம் அது.

நான்