உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

77

அழுத்தம் திருத்தமான தமிழ்ப்பேச்சு; உதாரமான ஆனால் நகைச்சுவையும் கிண்டலும் பொதிந்த உரையாடல்; என்ன இடை யூறு வந்தாலும் அதைத் தகர்த்தெறிந்துவிட்டு நினைத்த திட்டத்தை நிறைவேற்றித் தீர்க்கும் ஆற்றல்; ஊர்வாய்க்கு அஞ்சாது தாம் கொண்ட குறிக்கோளில் நிலைத்து நிற்கும் ஆண்மை; இத்தனை அரிய குணங்களையும் பயன்படுத்தித் தமிழுக்கும் - சைவத்திற்கும் ஏற்பட்ட இன்னல்களைத் துடைப் பதிலும் முழு வெற்றி கண்டவர்கள் தங்கள் தமையனார். அவர்களுடை ய முயற்சியின் மகுடமாகவும் வெற்றியின் சின்னமாகவும் இருப்பது கழகம்.

திருவரங்கனாரின் முயற்சிச் சின்னம் கழகம் என்றார் நடுவர். பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையார் அதனை மேலும் மெருகிட்டு விளக்குகிறார்:

66

ஆசிரியர் மறைத்திரு மறைமலையடிகளாரின் தேசிய உடல் புகழ்த் திருமேனியே தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். அதனைக் கனவார்வத் திட்டமாகப் படைத்தாக்கிய பெருமை அண்ணல் வ. திருவரங்கனாருக்கு உரியது” என்பது அவர் உரை.

وو

நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் என்றார் பாவேந்தர். “கண்ணிரண்டும் ஒன்றையே காண்’ என்றார் பட்டறிவு மீக்கூர்ந்தோர். கழகப் பணியில் அரங்கரும் அம்பிகையாரும் ஆம் குடும்பமே ஈடுபட்டு நின்றதைக் கவினுறுத்துகிறார் காவல் கடன் வல்ல அறிஞர் என்.கே. வேலனார்:

66

'சற்றேறக்குறைய 35 ஆண்டுகளுக்கு முன் ஒருநாள்

என்று

ருவரங்கம் ங்கம் பிள்ளை அவர்களும் நீலாம்பிகை அம்மையார் அவர்களும் எங்கள் வீட்டிற்கு வருகை தந்தனர். ‘அறிவியற் கருத்துகளைத் தமிழில் எழுதுங்கள்; தமிழுக்குத் தொண்டு செய்தது போலாகும்' என்றார்கள். காவல் துறையில் பணியாற்றுகிறேன்; எனக்கு நேரம் ஏது' என்றேன். 'தமிழுக்காக அரை மணி நேரம் ஒதுக்கி வைக்கக் கூடாதா?' கேட்ட ார்கள். ஒரு நாளைக்கு அரைப் பக்கமாவது எழுதுங்கள் என்று அம்மையார் வற்புறுத்தினார்கள். அன்று தொடங்கி ஓய்வு கிடைத்தபோதெல்லாம் கட்டுரைகள் எழுதி வந்தேன். அவற்றின் விளைவாகப் புதியது புனைந்த அறிவியல் அறிஞர், இயற்கையும் செயற்கையும், மண்ணும் விண்ணும் முதலிய நூல்கள் வெளிப்பட்டன.