உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

இளங்குமரனார் தமிழ்வளம் - 26

தொண்டால் தம்மைக் கழகத் தொண்டுக்கு ஆளாக்கிக் கொண்ட அரங்கர்தம் சிறப்பை, உரைவேந்தர் ஒளவை துரைசாமிப்பிள்ளையவர்கள் குறிப்பிட்டு பாராட்டு

சு.

கிறார்கள்:

“46 ஆண்டுகளுக்குமுன் திருவரங்கம் பிள்ளை அவர்களின் தொடர்பு பெற்றுச் சில திங்களில் நண்பனாயினேன். அவர்கள் என்னைச் செப்பறைத் திருமடத்துக்கு அழைத்துச் சென்று அதன் அதிபர் சிவத்திரு அழகிய கூத்ததேசிகர் அவர்கள்பால் தகுவன சொல்லி ஞானாமிர்த ஏடு பெற உதவினர். அன்றுமுதல் கழகத்தின் தொடர்பு பெருகிற்று.

وو

ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு எவ்வாறெல்லாம் பணி செய்தலும். உதவுதலும், உள்ளன்பு செலுத்துதலும், குடும்பத்துடன் உழைத்தலும், உரிமை பாராட்டுதலும் வேண்டி யிருக்கிறது என்பது இவற்றார் வெளிப்படையாய் விளங்கும். இவ்வெல்லாவற்றினும் தம் செயலையும் எண்ணத்தையும் ‘யான் கண்டனையர் என் இளையரும்' என்பதுபோல் குறிப்பறிந்தும் கூறாமல் வழிப்பட்டும் செல்லவல்லால் வாய்த்தல் கட்டாயம் வேண்டும். அவ்வகையில் கழகத்தின் அடிநாள் தொட்டு இன்று வரை தம்மையே கழகத்திற்கு ஆளாக்கித் தாமே கழகமாகவும், கழகமே தாமாகவும், கழகத்திற்காக எத்தகைய ஈகத்தை (தியாகத்தை)ச் செய்யவேண்டுமாயினும் எண்ணிப் பாராது செய்ய வல்லாராகவும் வாய்த்த இளவர் வ.சு. வை அரங்கர் பெற்றது போல் வேறொரு பேறு இல்லையாம் எனலாம்! வ. சு. வுக்கும் தந்தையாய், தமையனாய், ஆசானாய், வழிகாட்டியாய், புரவலராய், புகழ் வளர்க்கும் செவிலியாய், புகழ்த்தொண்டிலே புகுத்திவைக்கும் ஒருமாமணியாய் இலங்கிய அரங்கரை

அண்ணலாகப் பெறும் பேறும் கிட்டற்கு அரியதாம். திருவருளே இவ்வாறு கழகப்பணிக்கென இலங்கும் இரட்டையரைப் படைத்து எழிலுறுத்தியது!

இரட்டையர்' என்றவுடன், இவர்கள் இருவருக்கும் எவ் வகையிலும் கருத்து வேறுபாடு இல்லையோ? கருத்து வேறுபாடு எழுந்ததும் இல்லையோ? என்னும் எண்ணங்கள் தோன்றலாம். உடன்பிறப்பாய், உடன் உறுப்பாய் ஒட்டிப்பிறந்த இரட்டை யர்க்கும் உணர்வு வேறுபாடுகள், செயல்திற வேறுபாடுகள் ஏற்படும் என்பது அனைவரும் அறிந்த உண்மையே! அவ் வேறுபாடு உயிர் கலந்தோன்றிய செயிர்தீர்க் காதலர்க்கும் உண்டு எனின், உடன் பிறப்பாளர்மாட்டு ஏற்படுவதில் வியப்பு