உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

79

இல்லை! ஆனால் அவ்வேறுபாடு, தன்முனைப்பால், தடித்தனத் தால் ஏற்படாக்கால் போற்றக்கூடியதாய் அமைந்துவிடுமன்றோ. தந்தையின் கருத்தும் மைந்தனின் கருத்தும் மாறுபடும் டங்கள் உண்டாயினும் தந்தைமைத்தகவும், மைந்தமைத் தகவும் ஊடகமாக இருக்குமாயின் ஒருவருக்காக ஒருவர் உருகி நின்று, வேற்றுமையில் ஒற்றுமை கண்டு ஒருவருக்கு ஒருவர் துணையாய், இணையாய், ஊற்றமாய் நின்று உதவுவர் அன்றே! அந்நிலை திருவருள் வலத்தால் அரங்கர்க்கும் அவர்தம் இளவலுக்கும் அமைந்து இருந்ததாம்.

அரங்கர் கண்டிப்பானவர்; கண்டிப்பில் உடன் பிறப்பையோ உறவையோ கலக்க இசையாதவர்; பணிவேறு குடும்பப் பாசம் வேறு என்று துணிந்தவர்; கழக நிறுவனராத லோடு காவலராகவும் திகழ்ந்தவர்; கழகமே தம் ஊனினும் உயிரினும் உயர்ந்ததென உளங்கொண்டவர்; கழகப்பணி என்பது தம் முழுப்பணியேயன்றி 'மணிகண்டு' பொழுது கண்டு’ நிறுத்தியும் தொடங்கியும் ஓய்ந்தும் உறுத்தும் செய்யும் பணியென எள்ளளவும் கருதாதவர்! நாளின் பகலும் இரவும், நன்மையும் தீமையும், வாழ்வும் வறுமையும் எல்லாம் எல்லாம் கழகமாகவே மாறிவிட்டவர்! தலைமையின் பொறுப்பும், தலைமையை மதித்து நடக்கவேண்டிய அலுவலர் ஏவலர் நிலையும் வரம்பாக மதித்துப் போற்றுபவர்! இவ்வளவும் அரங்கர்க்கு இயல்பு என்றால், இதே இயல்பு இளவலார் வ. சு. வுக்கும் உண்டு என்றால், எஞ்சிய வேறுபாடுகள் எல்லாம் என்ன செய்ய வல்லன! நோக்கு ஒன்றாகிவிட்டால், போக்கில் உண்டாகும் வேறுபாடுகள் வேறுபாடுகளாக நிற்கத் தக்கனவோ?

தம் தம்பியே முகவர் என்பதால் கண்டிக்காமல் விட்டாரா அரங்கர்? அறிவுறுத்த வேண்டியதை அறிவுறுத்தாமல் தளர்ந் தாரா? தவிர்ந்தாரா? ஏனையோரைக் கண்காணிப்பதற்கு ஒப்பாக என்பதினும் ஒருபடி மேலாகவே கண்காணித்தார்! கண்டித்தார்! அழுது தேம்புமாறும் கண்டித்தார்! தாம் அழுது தேம்பிக் கொண்டும் கண்டித்தார். “உன் நன்மைக்குத் தானே சொல்கிறேன், உன் எதிர்காலம் எண்ணித்தானே சொல்கிறேன்; உன் அண்ணனாக ல்லை; தந்தையுரிமையில்தானே "தட்டிக் கேட்கிறேன் என்றெல்லாம் நைந்துருகி நன்மொழியுரைத்தார். தம் உடன் பிறந்தார் பிறர் நோக்கில் எவ்வளவு பெருமையராய்ப் பேராற்ற லராய் விளங்க வேண்டும் என்னும் எண்ணத்தின் எழுச்சியால் எடுத்துரைத்தார். பாராட்டத்தக்கவை அடுக்கடுக்காக நிகழும்

وو