உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

இளங்குமரனார் தமிழ்வளம் – 26

போது உள்ளுக்குள் கிளுகிளுத்து உவகை கூர்ந்து, மட்டோடு காட்டி அமைத்தார். எப்படி யெப்படியெல்லாம் செயலாற்ற வேண்டும் என்பதை வரையறுத்து வலியுறுத்தினார். தம் தம்பியின் எதிர்காலம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று ஆர்வமீதூரப் பெற்றாரோ அதற்குத் தகவெல்லாம் வழிகாட்டினார். மாறுபட்ட கருத்து எழும்போது தம் மனக் கருத்தை வலியுறுத்தினாலும், தம்பியர் எண்ணம் போல் செயல்படுவதற்குத் தடையாக நிற்காமல் தம் கருத்தை உரைத்த அளவில் அமைந்தார். தலைமையில் இருப்பார் எவருக்கும் இத் தன்மை வருதல் அரிதினும் அரிதாம்!

66

'தமையன் தம்பி என்பது வீட்டில் கைக்கொள்ள வேண்டியதாகும். ஆபீசுக்கு வந்துவிட்டால் அதனை முற்றிலும் மறந்துவிடவேண்டும்

66

"வேலைக்காரர்கள் அன்பு, பணிவு, நேர்மை உடையவர் களாயிருக்கிறார்களா வென்பதை முதன்மையாகவும், வேலைத் திறமையுடையவர்கள்தாமா வென்பதை அடுத்தபடியாகவும் எண்ணிப் பார்த்துத்தான் வேலைக்கு வைப்பார்கள். அப்புறமும் அவ்வாறு நடக்கிறார்களா என்பதை ஆராய்வது முதன்மை யாகும் என்பதை எவர்தம் தெரியாமல் இருக்க முடியும்"

“அவரவர் சொந்தக் காரியம் வரும்போது பேச்சு வேறு செயல் வேறாகவே இருப்பதைக் கண்டு வருகிறேன். ஆதலால் நாம் எப்போதும் நம் சொந்தக் காரியத்திலும் பொதுக் காரியத்திலும் மனச் சான்றுக்கு விரோதமின்றித் தாராள புத்தியுடன் வஞ்சனையின்றி நடந்துவந்தால் ஆண்டவன் நமக்கு நன்மையே செய்வான் என்பது எனது நம்பிக்கை.

“வஞ்சனையின்றி நடப்போர்க்குத் துன்பமிராது. பொருள் தானாகவே சேரும். வஞ்சனையுடையோர், 'சூதும் வாதும் வேதனை செய்யும்' என்று பெரியோர் திருமொழிப்படி துன்பமே யடைவார்கள். ஆதலால், நாம் கள்ளங் கவடின்றி ஒருமையோடு கழகத்தை நடத்த வேண்டியது முதன்மை என்பதைக் கடைப் பிடிக்க.

"நிமிர்ந்தவன் குனிய வேண்டியதும், குனிந்தவன் நிமிர வேண்டியதும் உலகில் வந்தே தீரும்

66

'தூய்மையோடு அஞ்சாமல் நடப்பதுதான் ஆண்மை; உன்னை நான் பிள்ளையாக நினைத்துத்தான் புத்தி புகட்டி வருகிறேன்.”