உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

81

"செலவிற்குச் சோம்பாதே. இதிலெல்லாம் மனிதன் நினைத்தபடி எதுவும் நடந்துவிடாது. ஆண்டவனைத்தான் நம்பி நடக்க வேண்டுவது நம் கடமையாய் இருத்தல் வேண்டும்.” தூய உள்ளமுடையார் எதனையும் எளிதில் தெரிந்து கொள்ள முடியும்.

66

وو

டை விடாமல் அறப்பணி செய்து வருவதாகவே கருதி வருகின்றேன். என் தொடர்பாய் உள்ளவர்களும் என்னைப் போலவே கருதி நடக்க வேண்டும் என்பது என் விருப்பம்.

99

அறிவுரை - அறவுரை - அருளுரை கூறும் அரங்கர் நூல் வெளியீடு பற்றி எழுதி வழிகாட்டவும் செய்கிறார்:

66

சங்க இலக்கிய இன்கவித் திரட்டை அறம் பொருள் இன்பம் என்ற வகையில் முறைப்படுத்தி வெளியிடுதல் நலமாகும். பல பேருக்குத் தபாலில் எழுதிக் கேட்பதைவிடத் திரு. ந. மு. வே. (வேங்கடசாமி நாட்டார்) அவர்கள் திரு. T. S. K. (தூ. சு. கந்தசாமி முதலியார்) அவர்கள், இவர்கள் போன்ற இயல்புடையார் சிலர் - அதாவது பொறாமையியல்பில்லால் சிலரிடம் மட்டும் காட்டிக் கேட்டால் போதுமானதாகும். எல்லார் சொல்வதையும் Carry-out செய்தால் நலமாகாது. சங்க நூற் பயிற்சி மிக்க சிலரை, நம் கழகத்தினிடம் அபிமானமுடைய சிலரைக் கேட்டால் போதுமானதாகும். என் எழுத்தில் இருந்தே நுட்பமறிதல் வேண்டும். பரநலப் புலியாயிருத்தல் வேண்டும்.

66

“அச்சிடுவது பெரிதன்று. அழகாய்ப் பயிண்டு செய்வது பெரிதன்று. பிழையும், பொருட்பிழையும் இன்றியும், பிழை கண்ட ஞான்றே திருத்தி வெளியிடுதலுமே புகழைத் தரும்”

மரக் கோட்டம் (வளைவு) தீர்ப்பது நூல்; அதுபோல் மனக் கோட்டம் தீர்ப்பதும் நூல்; இத்தகைய உயர்ந்த பெருமைக் குரியதாம் நூலை, இழிவுறுத்துவதுபோல் நூலின் பெயரால் எத்தனையோ குப்பை கூளங்களும் தீமைக் கிருப்புகளும் வெளிப்பட்டு நாட்டைக் கெடுக்கின்றன. இவை ஒருபாலாக, மற்றொருபால் பள்ளியில் பயில்வாரும் மூலநூலைக் காண வொட்டா வகையில் உரைநூல்கள் பல எழுதுகின்றன. கழகம் தொடக்கநாள் முதலே மூலநூலையன்றிக் கருவிநூலை யன்றி என்றும் வாழும் நூலையன்றி நாட்டுக்கும், மொழிக்கும், மக்களுக்கும், பெருமையும் நலமும் பயக்கும் நூலையன்றிப், பிறவகை நூல்களை வெளியிடாத வீறுமிக்க நோன்பை விழுமிதாகப் போற்றி வருகின்றது. அப்போற்றுதலைச் சிறிதும்