உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

இளங்குமரனார் தமிழ்வளம் - 26

.

நெகிழ விட்டதேயில்லை! ஆனால் கழக அமைச்சர் திருவரங் கருக்கு ஓர் எண்ணம் 1941இல் உண்டாயிற்று. பள்ளி இறுதித் தேர்வு (S.S.L.C. தமிழ்ப்பாட) நூலுக்கு உரைநூல் போட வேண்டும் என்பது! அவர், தம் நினைப்பை நூல் வெளியீட்டுப் பொறுப்பை மேற்கொண்டிருந்த சென்னை முகவராம் தம் தம்பியார் வ. சு. வுக்கு எழுதினார். நேரிலும் கூறினார். ஆனால் வ. சு. அவர்கள் அதற்குச் செவிசாய்க்கவில்லை! அமைச்சர் வ.சு. கட்டளை இட்டும், அவர் கட்டளையை நிறைவேற்றற்கமைந்த முகவராம் அலுவலர், நிறைவேற்றாதிருக்க இயலுமோ? வ. சு. வின் உறுதிப்பாடு அசையவில்லை; ஆட்டங் கொள்ளவில்லை. பின்னரும் வலியுறுத்தினார் அரங்கர். எழுதத்தக்கார் இவர் என்பதையும் வலியுறுத்தினார்; உரைநூல் வெளியீட்டால் கழகத்திற்காம் நலத்தையும் தெளிவித்தார். ஆயினும் வ. சு. வின் நிலைமை சிறிதும் மாறிற்றில்லை.

"S.S.L.C. Notes போட்டால் லாபமில்லாவிட்டாலும் கழக adverticements பரவுமென் றெண்ணினேன். உன்னிடம் கலந்த போது வேண்டாமென்று தெரிவித்துவிட்டாய். நான் வேண்டு மென்பதை வேண்டாம் என்பதே உன் இயல்பாய் இருக்கிறது.

"S.S.L.C. Notesஐ நமது இளவழகரைக் கொண்டே எழுதச் செய்யலாம். இன்றேல் வேறு யாரையேனும் கொண்டு விரைந்து எழுதச் செய்து வெளியிடுதல் நலமாகும்.”

தமிழ்மொழியைக் காலத்திற்கு ஏற்றதாய் வளர்த்துச் சிறப்பிப்பதில் வ. சு. அவர்களுக்கு இளமை முதலே ஈடுபாடு இருந்தது. துறைதோறும் அது வளர்தற்குக் கழகம் பணி செய்தல் கட்டாயம் வேண்டும் என்பதில் பேரார்வம் கொண்டிருந்தார். அரசும் பல்கலைக் கழகங்களும் அவற்றைச் செய்ய வேண்டும் என்று அமைந்துவிடாமல், அவற்றுக்கெல்லாம் முன்னோடியாய் வழிகாட்டியாய்க் கழகம் செயலாற்ற வேண்டும் என்று முனைந்து பணி செய்தார். அவற்றுக்கு அடிப்படை, ‘கலைச் சொல்லாக்கம்’ என்பதைக் கண்டுணர்ந்தார். ஆதலால் பல்வேறு துறைகளிலும் நல்லறிவு வாய்ந்த பெருமக்களைக் கூட்டிக் ‘கலைச் சொல்லாக்க’ ஆய்வு நடாத்தினார். சொல்லாக்கம் செய்யவும், நூல் வெளி யிடவும் துணிந்தார். ஆனால், கழகம் கூட்டுப்பங்கு நிறுவனம் என்பதையும், அதற்கு அமைச்சர் ஒருவர் உளர் என்பதையும் பங்காளிகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியதே அமைச்சர் முதல் அனைவர் கடமையுமாம் என்பதையும் வ.சு.வின் ஆர்வம் கருதிற்றில்லை. “செய்தக்க அல்ல செயக்கெடும்” என்பது