உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

107

"திருக்குறள் சமயத்தில் கோயில் வழிபாடு இல்லையே; நாம் திருக்கோயிலை விட்டுவிட முடியுமா?" என வினாவினார் முத்தமிழ்க் காவலர்.

"சமயம் என்ற சொல் தடுமாறச் செய்யும்; வேறுபாடு களையும் உண்டாக்கும்; அதற்கு மாற்றீடான வேறொரு சொல் வேண்டும்" என்றார் பேராசிரியர் அன்பழகனார்.

tt

இதே கருத்தை யுரைத்த பாவலரேறு பெருஞ் சித்திரனார், சுணக்கமின்றி விரைந்து செயல்படவேண்டும்" என்றும் கூறினார்.

-

"அறிவுச் சமயம் அமைந்தால் சாதிப்பிடிப்பற்ற மூட நம்பிக்கையற்ற - அறிவுச் சமயம் அமைந்தால் வரவேற்ப" தாகத் தி.க. பொதுச் செயலாளர் மானமிகு வீரமணியார் உரைத்தார். மதம் அல்லது சமயம் என்பதை வழி, நெறி' கோட்பாடு, கொள்கை எனக் கொள்ளுகையில் அதனை இனத்துடன் நாட்டுடன் அடக்குவது ஆகாது என்கிறார் பேரா. கு. வெ.கி. ஆசான்.

-

-

உள்ளீடு அழிந்து வரும் மாந்தகுலத்தை மீட்க உள்ள ஒரே வழி திருக்குறளை வாழ்வியல் அறமாகச் சட்டமாகக் கொள்வது தான், வாழ்க்கையின் அனைத்துச் சிக்கல்களுக்கும் திருக்குறள் வழி தீர்வு காண்பது என்பது திருக்குறள் பேரவையின் குறிக்கோள்; திருக்குறள் பேரவை சோவியத்தில் ஏற்பட்ட புரட்சியைப் போல் ஒரு புரட்சியை ஏற்படுத்தத்தக்க வலிமை யுடையதாக அமைய வேண்டும்" இன்னபல கருத்துகளை, ஏன் திருக்குறள் பேரவை? என்னும் கட்டுரையில் அடிகளார் விரித்தெழுதினார்.

"திருக்குறளை ஒரு சமய நூல் என மக்களுக்கு அறிமுகப் படுத்திப் புது விளக்கங்கள் தந்து அதன் பெயரில் ஒரு சமயத்தை நிறுவினார் எதிர்காலத் தமிழகம் நம்மை மன்னிக்காது மயங்காமல் தூற்றும்" எனச் சிந்தனைச் செம்மல் கு.ச. ஆனந்தனார் கொந்தளித்துரைத்தார்.

"திருக்குறள் சமயம் என்ற பெயர் வேண்டாம்; தோல்வி பெறும்; 'குறளிய நெறியம் காண்க' என்றார் சங்ககிரி சக்திவேல்.'

மனித குலச் சிக்கல்களுக்குத் தீர்வு காண பெரிதும் துணை செய்ய வல்லன காந்தியமே குறளியமே! மார்க்கியமே! என்றும் பட்டிமன்றம் மதுரையில் 6-1-82-இல் நிகழ்ந்தது. நடுவராக