உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

-

இளங்குமரனார் தமிழ்வளம் 28

இருந்த அடிகளார், குறளியமும் காந்தியமும் சோதிக்கப் படாதவை. மார்க்கியக் கருத்துகள் சோதித்துக் கொண்டிருக்கும் நிலையுள்ளன இந்திய சமுதாய மக்களால் காந்தியக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடியாமல் போய்விட்டன. திருக்குறள் அதன் சிந்தனைக் கருத்துக்கள் ஏட்டளவில்தான் நின்றனவே தவிர தொடர்ந்து செயல்படுத்த ஏதுவாகவில்லை என்னும் கருத்தை வெளியிட்டார். இதனை வெளியிட்ட குறளியம் இக்கருத்தைக் குறளியச் சிந்தனையாளர்கள் தவறெனக் கருதுகிறோம். பலபடி நிலைகளில் ஒன்றான மார்க்கியம் பல நாடுகள் ஆய்வில் தோல்வி கண்டு வருவதும் முற்றான. இதுவே அன்று என்பதும் சிந்திக்கற்பாலது குறளியத்தை ஏட்டளவில் இருக்கச் செய்தது யார் தவறு?" என்னும் வினாவை எழுப்பியது

(2-7-50).

ஆகூழா? போகூழா?

இவ்விதழின் ஆசிரிய உரை, “ஆகூழா? போகூழா?" என்பது. பெரியார் மாவட்டத் திருக்குறள் பேரவை மாநாடு பற்றியது.

அருள் நெறியின் ஒரு பகுதியே திருக்குறள் என்று தடுத்து நின்றது ஒரு கூட்டம். திருக்குறளின் ஒரு பகுதியே அருள்நெறி என அங்காந்து நின்றன குறளிய நெஞ்சங்கள். தோல்வியுற்றால், இன்னும் சில நூற்றாண்டுகள் அடிமை வாழ்வே தொடரும். யாரை நொந்து என்ன பயன்? இராவணனின் படை போரில் மிகுந்து மாண்டு போனதால், அவர்களது பரம்பரையினரைவிட விபீடணனின் பரம்பரை இந்நாட்டில் மிகுந்து வாழ்கிறது. ஆனாலும் ஒரே இனக்குருதி அல்லவா? அதனால் அவர்களும் தமிழர்கள் தாம்-திராவிடர்கள்தாம்" என எழுதினார்.

அடி களார் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. கலந்து கொண்டபேரா.க. அன்பழகனார் மாநாட்டிற்கு அடிகளார் வர முடியாதது ஒரு குறையே எனச் சுட்டினார். அடிகளார் கலந்து கொள்ளாத கரணியத்தை நானறிவேன். ஆனால் அதை அனைவரும் அறியும்படி வெளிப்படையாக எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என வேலூர் மார்த்தாண்டனார் எழுதிய அஞ்சல் நெஞ்சமலரில் இடம் பெற்றது (2-9-45) ஓரிடைவெளி

-

நாகர் கோயில் மண்டைக் காட்டில் சமயப் பிணக்கால் நேரிட்ட கொடுமையை நீக்கும் பணியில் அடிகளார் முந்து நின்றார். “அந்நிலையில் சனாதனக் கொடுமைகளையும் மதவெளி