உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

109

களையும் நீக்கி மக்கட்கு வழிகூறி நெறிப்படுத்தி மன்பதையை மகிழ்விக்க அவ்வப்போது அருளாளரின் இலக்கணங்கட்கு இலக்கியமாக நம்மனோர் கண்முன் நடமாடும் நல்லர் தவத்திரு குன்றக்குடி அடிகளாரே ஆவர்” எனக் குறளியம் பாராட்டுகிறது (2:9:6). அடிகளார் வெளிநாட்டுச் செலவு வரவேற்பு ஆகியவையும், திருக்குறள் பேரவையில் வேலா பங்கேற்பு பேரவை நிகழ்ச்சிகளைக் குறளியம் வெளியிடுதல் என்பனவும் தொடர்கின்றன. எனினும் ஓரிடைவெளி ஒரு விரிவு ஒரு வெடிவு பெருகுகின்றது.

புதியதோர் குறளிய உலகு

-

-

1-12-1983 இதழ் முகப்பு புதியதோர் குறளிய உலகுபடைப் போம் எனப் பளிச்சிடுகின்றது.

"கடந்த ஈராயிரம் ஆண்டுகளாகத் திருக்குறளைப் பேசினோம்; திருக்குறளைச் சிந்தித்தோம்;"

திருக்குறளை ஆராய்ந்தோம்; திருக்குறளை எழுதினோம்! ஆனால், திருக்குறளை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏற்றுக் கொண்டதாகச் சொல்லி ஏமாற்றுகிறோம்! ஏமாற்றுகிறோம்!

இன்னும் எத்தனை தலைமுறைகட்கு இந்த ஏமாற்றுப் பணி தொடர்வது? துணிவுள்ளவர்கள் தொடருங்கள்! தெளிவுள்ள வர்கள் ஒன்று சேருங்கள்! நம்மிடமுள்ள எல்லாச் சார்புகளையும் (சமயம்) கட்சிப் பிணக்குகளையும் தூக்கி எறிவோம்! குறளியமே வாழ்வு நெறி! குறளியமே ஆட்சி நெறி! முழுமனத்தோடு, துணிவோடு, தெளிவோடு, ஒபக்கத்தோடு, ஏற்றுக் கொள்பவர் களே வாருங்கள்! ஒன்று சேருவோம்! ஒரு நெறி நிற்போம்! புதியதோர் குறளிய உலகு படைப்போம்! எழுதுங்கள்; பேசுங்கள்; உறவாடுங்கள்; உறுதிகொள்வோம்! உறவு கொள்வோம்! வரும் தி.பி. 2015 நம் குறளிய உவலகு பிறக்கும் நாள்!" என்பது

அது.

1-1-84 இதழின் (4 : 6) ஆசிரிய உரை - குறள் - குறளியம் - குறளாயம்"

1-11-81 இல் நாம் தொடங்கிய பணியின் தொடர்பே இத்தலைப்பும் அதனை ஒட்டிய முயற்சிகளும் என்னும் முன்னு ரையுடன் தொடங்குகிறது.

"நான், 'திராவிட சமயத்தவன்' என்று தமிழக முதல்வர் மாண்புமிகு ம.கோ.இரா அவர்கள் சொல்லியதை ஒட்டித்