உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

தொடங்கிய கருத்துரைகளில் 'திருக்குறள் சமயம்' பிறந்தது. தமிழ்நாடு அளாவிய நிலையில் தமிழ்ப்பேரறிஞர்களும் சான் றோர்களும் கலந்து கொண்டு தம் கருத்தை வெளிப்படுத்தினர். கடுமையான எதிர்ப்புகள், உறுதியான பாராட்டுக்கள், சிக்கல் களைச் சுட்டிக்காட்டும் சிந்தனைகள் இவ்வாறு ஏழத்தாழ ஆறு திங்கள்கள் தொடர்ந்தன.

'ஓர் ஆண்டு விவாதம்' எனக் கூறி நம் தவத்திரு. குன்றக்குடி அடிகளார் பெருமான் அவர்களும் தம்மை விடுவித்துக் கொண் டார். அனைத்தும் நம் இதழ்களில் வெளிவந்தன. இரண்டு ஆண்டுகட்குப் பின் திரும்பவும் சிந்திக்கத் தொடங்கியுள்ளோம். அதன் முனைப்பே சென்ற இதழ் முகப்பும், இவ்விதழிடை உள்ள வெள்ளையறிக்கையும்.

"சமயம், சமுதாயம் ஆக்கப்பட்டுள்ளது பட்டறிவுச் சாணைக்கல் மிகவும் பயன்பட்டுள்ளது. வெற்றியா தோல்வியா எனத் துணுக்குறாத மனங்களின் மொத்த முயற்சிகள் திரும்பவும் சிந்திக்கத் தொடங்கியுள்ளன. இந்த ஊர் -இந்த நாடு - இந்த உலகம் என்று தேடிக்கொண்டிருக்கும் மாந்த நிறைவாழ்வை இதிலே காட்ட முடியும் என்ற உறுதி மிகவும் வலுவடைந்துள்ளது.

66

“கடந்த ஐம்பது ஆண்டுக் காலமாகத் தொடர்ந்த பகுத்தறிவுப் பணிகள் நம்மைப் பாழ்ங் குழிகளில் இருந்து மேடுகளில் ஏறி நிற்கச் செய்து விட்டன. ஆனால் அதன் பிறகு? வினாவுக்கு விடையில்லை; தோன்றும் சிக்கல்களுக்குத் தீர்வு இல்லை. புதிய வழி தேடினும் கண்டிலோம். நம்மோடு வந்த பலர் திரும்பவும் பாழ்ங்குழியே போதும் எனப் போய் விட்டனர். புரியாத சிலர் பொல்லாதவை யெல்லாம் புதிய வழி என்கிறார்கள்.

திருக்குறளை அறநூல் நீதிநூல், மறைநூல் எனப் பலவற்றால் கூறினரே ஒழிய, அஃதோர் சமுதாய நூல் எனச் செப்புவார் இல்லை. சொல்லுக்கே ஆளில்லை என்றபோது நடை முறைக்கு என்பதை நாம் எங்கு போய்த் தேடுவது? ஆனாலும், அறிவுச் சீற்றங்களின் வழக்கமான செயற்பாடுகளை உடையவர்கள் ஏதாவது செய்துதானே ஆகவேண்டும். பேராயக் கட்சியைத் தொடங்கியவர்கள் அண்ணல் காந்தியையோ இன்றைய விடுதலை இந்தியாவையோ எண்ணியா தொடங்கினார்கள்?

நாமும் நம்போன்ற மன உளைச்சல்களைக் கொண்டோரும் சேர்ந்து விதைத்துள்ளோம். தி.பி. 2015 தை முதல்நாள். அவற்றைச் சிந்தித்து நீர்வார்ப்போம்; வளர்ப்போம். வளர்வித்து அதன்