உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

111

பயன்களை நாமும் நுகர்ந்து உலகையும் நுகரச் செய்வோம். மேலே சொல்லுங்கள். குறளியத்தின் வெள்ளறிக்கைபற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள் என்பதை எழுதுங்கள். வரும் தை முதல் நாளன்று ஒன்று கூடிச் சிந்திப்போம். வாருங்கள் வந்து திருவள்ளுவரின் அருள் தொண்டராகுங்கள்" என்று அழைப்பு விடுகிறார்.

ஒரு மீள் பார்வை

திருக்குறள் பேரவையின் மண்டலச் செயலாளராக மாவட்டப் பொறுப்பாளராக - பேரவைச் செய்திப் பரப்பாளராக அடிகளார்க்கு அணுக்கராக அமைந்து பல்லாற்றானும் மதித்துப் போற்றி பணிந்து வழிபட்டுக் கடனாற்றிய வேலா, குறளாயம் கண்ட நிலை இது. குறளாயம் பற்றிய செய்தி தனியே தொடருமாகலின் இவ்வளவில் அமையலாம்! ஆனால் ஒரு மீள் பார்வை பார்த்தல் வேண்டும்! அதுநோக்கியே ஒவ்வொரு செய்தியும் விரிவாகவும் அவரவர்கள் எழுத்துச் சான்று வழியா கவும் காணத் தலைப்பட்டோம்! எந்த ஒரு செயலும் அல்லது நிகழ்ச்சியும் ஒரு படிப்பினை ஆகாவிட்டால் பின் வருவார்க்கு என்ன பயனாம்? படிப்பினையாக எடுத்துக் கொண்டால் நீர் கிழிந்த வடுப்போல் மாறி நிலைத்த தொண்டுக்கு உதவுமே!

-

திருக்குறளைக் குமுகாயப் பொருளாக்க நடைமுறைப் பொருளாக்க-உலகளாவிய கொள்கை விளக்கப் பொருளாக்கக்- கிளர்ந்ததாகச் சொல்லிய திருக்குறள் பேரவையில் இயைந்து இணைந்து உடனாகி ஒன்றாகி நின்ற வேலாவும் அடிகளாரும் கொள்கை வழியால் விரிசல் கண்டனர் என்று சொல்ல முடியுமா? அப்படிச் சொல்ல முடியும் ஆயினும், அக்கொள்கை விரிசலும் தனித்தனி அமைப்பு ஆகும்படி ஏற்பட வேண்டுமா? ஆனால், ஏற்பட்டு விட்டதே ஏன்? இணைந்திருந்தால் - இணைந்து கடனா ற்றினால் - இன்னும் எவ்வளவோ மேம்பட்ட பயன்களைக் கண்டிருக்கக் கூடுமே! என்று எண்ணவே தோன்றுகின்றது!

-

அடிகளார் புதிய பார்வையர் -சமயக் கட்டுக்குள் - சமயக் கட்டு மடத்துக்குள் இருப்பினும் அதனையும் கடந்து புரட்சிப் பார்வை பார்க்க வல்லார் என்றன்றோ தமிழ் உலகம் கண்டது! தீர்மானித்தது!

"புரட்சி மணம் பூக்கும் உருசிய மண்ணின் மணமும் சிவனிய மணத்தொடு உலாக் கொள்ள இயலும்!