உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

நடமாடும் அப்பரடிகள், நம்பா மதத்துப் பெரியாரொடு தழுவிக் கொள்ள இயலும்!

46

'கடவுளைப் படைத்தவன் முட்டாள்; அதனை நம்புபவன் மூடன்" என்று கூறும் பெரியார், மகா சந்நிதானம் என்று வீழ்ந்து வழிபடவும் காண முடிந்தது.

வேறு எந்தச் சிவனிய மடத்திலாவது இவற்றை எதிர்நோக்க முடிந்ததா? இத்தகைய விரிந்து பரந்த கொள்கைப் பார்வை வேலாவுக்கும் அடிகளாருக்கும் அமைந்தும், தொடராமல் இடைத்தடைப்பட்டுப் போவானேன்! நாம் எதிர் நோக்கிய நல்விளைவுகள் ஏற்படாமல் போவானேன்?

வேலா உரிமை வாழ்வர்; உரிமைத் தொழிலர்; உரிமைத் தொண்டர்; உரிமைக் கொள்கையர்; அவரை - அவர் கருத்தை - அவர் இயக்கத்தைத் தீர்மானிப்பார் அவரே! அந்நிலை அடி களுக்கு உண்டா? அடிகளார் ஒரு துறவு மடத்துத் தலைவர்; அவர் எண்ணினாலும் எண்ணாவிட்டாலும் அத்துறவு மடத்து அடிப்படைக் கோட்பாடுகளுக்கு மரபியல் உண்டு. அன்றியும் அத்துறவு மடம் அன்றி, அச் சமயஞ்சார் பிற துறவு மடங்களும் உண்டு. அவை ஏறிட்டுப் பார்க்கவே செய்யும்! எதிரிட்டுப் பார்க்கவே செய்யும்! ஏனென்று தட்டிக் கேட்கவும் செய்யும்!

இன்னும் ஒன்று; மிகக் கடினமானது; தாம் இருக்கும் இடத்தின் பார்வைக்கு எதிரிட்ட பார்வையைத் தாமே வைத்து எதிர்ப்பார்க்கு இடந்தந்து போராட்டத்தில் புகுவது.

'திருக்குறட் சமயம்' என்றாலும் 'திராவிடச் சமயம்' என்றாலும் வேறொரு சமயம் தானே! திருவள்ளுவரைத் திருவள்ளுவ நாயனார் என வழங்கி உச்சி குளிர்ப்புறுபவர்களும் அப்பெயரைச் சமயப் பெயராக ஏற்பரா? தவப்பெருந்திரு, திருப்பெருந்திரு என்னும் அடைமொழிகளைக் கொள்ளலும் ஸ்ரீலஸ்ரீ என்பதற்கு இணையாகாது எனவும், இணையாகக் கொள்ளக் கூடாது எனவும், கொள்ளவும் மாட்டோம், கொள்ளவும் விடமாட்டோம் எனவும் பலப்பல சிவனிய மடங்கள் தவறு சைவ மடங்கள் திருக்குறள் சமய அல்லது திராவிடச் சமயப் புகவு பற்றிக் கருதவும் துணியுமோ? இக்கட்டான நிலை அடிகளார்க்கு! கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறிந்த கதை! சாக்கிய நாயனார் கதைப் பின்னணியை நோக்கவே நன்கு புலப்படும்?

-