உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

113

வேலா ஒரு நிகழ்ச்சியைக் குறிக்கிறாரே. இறும்பூது நிகழ்ச்சி என்கிறாரே! "திருக்குறளை நம்புபவர் நெற்றியில் பொட்டு எதற்கு? பூச்சு எதற்கு?" என்றதும் சந்தனப் பொட்டையும் பூச்சையும் நீக்கினாரே அப்படி அடிகளார் செய்ய இயலுமா? அப்பெரியண்ணப் பெரியவர் தம் வாழ்வுக்குத் தாமே தீர்மானிப்பர்! அவர் செய்யார்! அவர் ஒரு 'குறுக்கையை (சிலுவையை) மாட்டினும், பள்ளிவாயிலை நணுகினும் தடுக்க எவர்க்கும் மேலாண்மை இல்லை! ஆனால், அடிகளார் அதனைச் செய்யின் அந்நொடியே மடத்தை விட்டு வெளியேறாமல் இயலுமா? வெளியேறா விட்டால், வெளியேற்ற நடவடிக்கை இல்லையா? முறை மன்றம் இல்லையா? ஆதலால் அடிகளார் நிலையில் திருக்குறளைச் சமயம் ஆக்குதலோ 'திருக்குறள் நம்மறை' எனலோ இயல்வன அல்லவாம்! அவர் இருக்கும் இடம் அத்தகைத்து!

"வேலா போன்றவர்கள் இதற்கு எழுச்சி யூட்டிக் களம் அமைக்கும் பொறுப்பை ஏற்கட்டும்! அதற்கு முதல் ஆளாகத்தார் தாங்கிச் செல்லவும் களப்பலி ஆகவும் அணியமாக உள்ளேன்” என்று அடிகளார் கூறினாரே எனின், வேலா அடிகளார் வழியில் சென்று வந்தாரா? வேலா வழியில் அடிகளார் வந்தாரா? இதனை வேலா கூறியிருந்தால் பொருந்துவதாம்! அடிகளார் கூறியது, அக்கொள்கையை அப்பாற்படுத்தித், "தாம் அவ்வழியில் வழி நடத்திச் செல்ல இயலாது" என வெளிப்படக் கூறாமல் குறிப் பாகக் கூறி ஒதுங்குவதாம் செய்தியாம். அன்றியும், மேலோட் டமாக எண்ணும் அவையின் பாராட்டை எண்மையாய்ப் பெற்றுக் கொள்ளும் பட்டிமன்ற வழக்காடு மன்றப் பாங்குமாம்.

-

-

-

'சமயம்' 'மறை' என்பனவும் 'சாலா' என வேலாவை எதிர்ட்டார் இல்லையோ! எழுதிக் கண்டித்தார் இல்லையோ! உணர்வு மீக்கூர்ந்து திருக்குறட் சமயத்தின் சார்பு வேண்டா என் ஒதுங்கிக் கொண்டாரும் இலரோ! உண்டு ஆனால் வேலா, பலப்பலர் ஆய்வுக்கும் கருதுகோளுக்கும் சிந்திப்புக்கும் விட்டார்! அதன் முடிவு ஒத்த முடிவாக இருக்கும் இருக்கு வேண்டும் - என்று கூற அவர் அதிகாரியா? பலரும் பலப்பல கருத்துக்களைக் கூறினர். அக்கருத்துக்களைத் திரட்டித் தொகுக்கக் காலம் ஓராண்டு எல்லை இருந்தும் - ஓராண்டு எல்லை தந்தும் உணர்வு வயப்பட்டோர் முந்தி விட்டனர். வேலாவையும் நெருக்கினர்! அடிகளார்க்கும் எழுதினர்! அடிகளார் 'என்ன விரைவு!' எனவும் வினாவ, வினாக்கள் முந்துகின்றன? குறளிய இதழிலோ

-