உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

பேரவை நிகழ்விலோ வெளிப்பட இடைவெளி தோன்ற இல்லை எனினும் அடிகளார்க்கும் வேலாவுக்கும் இடைவெளி உண்டாகி விட்டது; சற்றே சற்றே விரியவும் ஆயிற்று! இது கொள்கை வழி இடைவெளியேயன்றித் தொடர்பு வகை தொண்டு வகை டைவெளியேயன்று என்பதைக் குறளியத்தை முழுமையாகத் தொடர்ந்து பார்த்து வருவார் அறிவார்! பேரவையும் குறளாயமும் இணைந்து செயலாற்றி வருதலும் கண்கூடு! ஏனெனில், “ஒத்துப் போகும் ஊடகம் ஒன்று! அது திருக்குறளே" ஆதலால்!

-

அடிகளார் பேரவைத் தலைவராக வேலா பேரவைப் பரப்புநராக இருந்து தொடர்ந்து பணி செய்திருந்தால் இன்னும் பன்மடங்கு நல்லவிளைவுகளை எதிர்நோக்கியிருக்கக் கூடும். ஏனெனில், 3-12-81 இல் அடிகளார் எழுதிய அஞ்சலைப் பலபடி கள் எடுத்துப் பலர்க்கும் விடுத்ததுடன், குறள்வழி ஒரு குமுகாயம் தோன்றும் என்ற நம்பிக்கையும், அப்பெருங் குமுகாயத்தில் ஒருவனாய்த்தான் நான் உயிர் நீப்பேன் என்னும் நம்பிக்கையும் உண்டாகியுள்ளமையையும் அடிகளார்க்குத் தெரிவிக்கும் வேலா, "ஆகூழா? போகூழா?" என்று பெரியார் மாவட்டத் திருக்குறள் பேரவை மாநாட்டு நிகழ்ச்சி குறித்து எழுதிய எழுத்து பிளவை வெளிப்பட உணர்த்திற்று! நிலைமை என்ன குறளாயம் என ஓர் அமைப்பு உருவாயிற்று!

-

-

இவ்விரிவாய்வின் முடிவென்ன? தமிழ் மொழி தமிழின இயக்கங்கள் உள்வெடிவுகளால் பிரிவாகி-மீண்டும் மீண்டும் அவை தொடங்கிய இடத்திலேயே தொடங்கி வளர்ந்து மீண்டும் ஒன்று தொடங்க வழியமைத்து ஓய்ந்து விடுகின்றன என்பதே! இசையில் ஆரோசை அமரோசை இன்பாகலாம்! கொள்கை வழியில் கேடேயன்றோ!

முனைப்புகள் - முட்டுதல்கள் - மோதுதல்கள் எல்லாமும் கொள்கை வழியில் நெருங்கி வருவார்க்குள்ளேயே-உறைப்பாக நிற்பார்க்கு உள்ளேயே ஏற்பட்டுக் - கொள்கைகளைக் கனவிலும் கருதார் இயக்கமாக்கி அவர்கள் மூடுவிழா நடத்துவதற்குத் துணைப்பட்டு நிற்பதே!

மிகைநாடி மிக்க கொளல்" என்பதனைக் கொள்கை வழிக்குக் கொள்வார் எவர்? எதிரிடையாளரிடம் - முரண்பட்ட கொள்கையாளரிடம் கூட்டு வைத்துக் கொள்வமேயன்றி, எம்மிடைச் சற்றே கொள்கை - கருத்து - வேறுபட்டாரிடத்துக்

-