உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

கல்வியில் :

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

மும்மொழிக் கொள்கை முரடானது! இருமொழிக் கொள்கை ஏமாற்றுவது! ஒரு மொழிக கொள்கை உகந்தது!

தேர்தலுக்கு முன்:

குறளியம் 1-7-86

திருக்குறள் நெறியைக் குறிக்கோளாகக் கொண்டு நல்லாட்சி (தி.மு.க. ஆட்சி) இங்கு மலரும்

தேர்தலுக்குப் பின் :

வள்ளுவர் கோட்டத்தில் பதவியேற்று

வரலாறு படைத்த

குறளியம் 1-2-88

கலைஞர் அவர்களே! தி.மு.க. ஆட்சியைத்

திருக்குறள் ஆட்சியாக மலரச் செய்து

உலகிற்கே வழிகாட்டுங்கள்

இஃதே எங்கள் எதிர் நோக்கும், வேண்டுகோளும்.

கொள்கை ஏற்க

குறளியம் 1-2-89

பழிநாணும் இயல்பற்றான் எத்தகைய அழகுடையவனாக இருப்பினும், அறிவுள்ளவனாக இருப்பினும். ஆற்றலுடைய வனாக இருப்பினும் கொள்கையை இழக்கத் துணிவான். கொண்ட கொள்கை மறந்து பதவிக்காக வாழும் அவர்கள் வாழ்வு இன்று கணிக்கப்படாமல் ஆகுலங்களால் மறைக்கப்பட்டாலும் காலம் நாளை மாறும்.ஆம் வெளிவரும் ஆதலின் நீங்கள் ஆளுங்கட்சியில் இருப்பினும் எதிர்க்கட்சியில் இருப்பினும் உணர்ந்து கொள்ள வேண்டியவை.

திட்டமும் மட்டமும்

1-9-89

மக்கட்கு வழிகாட்டியாக தலைவராக விரும்புபவர்களே, உங்கள் வாழ்க்கையில் ஒழுக்கத்திற்கு முதலிடம் வழங்குங்கள்.