உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

193

ஒழுக்கத்தை வழி நடத்துங்கள். அப்பொழுதுதான் தீட்டும் திட்டங்கள் திண்ணமான திட்டங்களாகச் செயற்படும். இன்றேல் திட்டம் மட்டமாகிவிடும்.

1-10-89

எவரால் எவர்?

செங்குட்டுவனின் காலத்தில் இளங்கோ இருந்தார் என்பதை விட இளங்கோ காலத்தில் செங்குட்டுவன் இருந்தார் என்பதே நாம் பெருமிதம் கொள்ளும் வரலாறு. அதேபோல் மூதறிஞர் செம்மல் காலத்தில் கலைஞர் ஆட்சி புரிந்தார் என்ற வரலாறு நாளை நாம் பெறும் பெருமித வரலாறு.

பெரும் புலவர் குழந்தையின் இராவண காவியத்திற்குப் பேரறிஞர் அண்ணாவின் அணிந்துரைச் சிறப்பும், மு.வ. வின் திருவள்ளுவர் (அ) வாழ்க்கை விளக்கத்திற்குத் தமிழ்த்தென்றல் திரு.வி.க.வின் அணிந்துரைச் சிறப்பும் போலக் கலைஞரின் குறளோவியத்திற்கு மூதறிஞர் செம்மல் அணிந்துரைச் சிறப்பு காலத்தால் அழியாத கல்வெட்டுப் போன்றது.

இத்தகு பெருமைகளை எல்லாம் உடைய மூதறிஞர் செம்மல் அவர்களின் இறுதிச் செலவில் தழைக அரசின் சார்பில் ஓர் அமைச்சர் கூடக் கலந்து கொள்ளாதது கலந்து கொள்ளச் செய்யாதது நாம் எல்லாம் தேர்ந்தெடுத்த தமிழக முதல்வர் கலைஞரின் குற்றமோ அமைச்சர்களின் குற்றமோ அல்ல. இயல்பாகவே தமிழர்களிடம் உள்ள அக்கரைப்பச்சை மேலுள்ள மோகமே! காலங்கடந்து உணர்வதிலும் செயற் படுவதிலும் தமிழன் தவறவே மாட்டான்.

இனி யாரும் அர்ச்சகர் ஆகலாம்,

இங்கில்லை; ஆந்திராவில்!

1-5-89

அர்ச்சகர் வேலையில் எந்தச் சாதியைச் சேர்ந்தவரும் சேரலாம். ஆனால் அவர் முறையாக அர்ச்சகர் வேலைக்குப் பயின்று தேர்வில் தேற வேண்டும். அரசு ஊழியர்களைப் போலவே நடத்தப்படுவர். நாட்டிலே முதன்முறையாக இந்துக் கோயில்களின் நடைமுறையைச் சீர்திருத்தும் நோக்குடன் மரபுகளை உடைத்துக் கொண்ட ஒரு புரட்சியான சட்டம்

து.