உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

இளங்குமரனார் தமிழ்வளம்

-

28

தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சீடர்கள் நடத்திய ஆட்சியிலும் இது தோன்றவில்லை. திரு. என். டி. இராமாராவ் இச்சட்டத்திற்கு முழு ஆதரவு தந்துள்ளார்.

கண்ணீர் விடத்தான் முடியும்

1-8-88

கல்வியை விலைபேசி வாழும் நாட்டை உருவாக்கிய இழிமை ஆட்சியாளர்களையே சாரும். சமுதாய அமைப்பையே உருக்குலையச் செய்த இவர்களை என்னென்று அழைப்பது? கயவர்கள் என்று சொல்லிக் கண்ணீர் விடத்தான் முடியும்! வேறு என்ன செய்ய?

இடைத்தரகர்களை அகற்றுதல்

1-7-89

இடைத்தரகர்களை இறைமை உணர்வுக் களங்களில் இருந்து அகற்ற வேண்டும் என்றும் பதினெட்டு அகவைக்குமுன் மத இயக்க ஈடபாடுகளில் மக்கள் ஈடுபடலாகாது என்றும் சட்டமியற்றிப் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதைச் சமுதாயத்தில் உயிர்ப்பிக்க வேண்டும் என்றும் குறளாயத்தார் எதிர் நோக்குகின்றனர். உலகம் முழுவதும் இவ்வியக்கம் இருபது ஆண்டுகளில் பேராட்சி நடத்தி மக்களை உய்விக்கும் என்றும் ன்றைய உலக மாந்தர் படும் இன்னல்களை நீக்கி, மாந்தநேய உணர்வுகளைக் காப்பாற்றி இயக்கும் ஆற்றல் திருக்குறள் ஒன்றுக்கே உண்டு என்றும் குறளாயத்தார் அறிவிக்கின்றனர். முடியுமா? முடியாதா?

தவத்திரு குன்றக்குடியடிகளார் 'திருக்குறள் நம்மறை' என்னும் கொள்கைக்காகத் தம் திருமடத்தை விட்டு வெளியேறி யிருந்தாலும் பெருஞ் செல்வாக்கும் பெரும் நிறுவனப்பொறுப்பும் உடையவராக இருந்திருப்பதுடன், பேரியக்கத் தலைவராகவும் இருந்திருப்பார். 'கடவுள் இல்லவே இல்லை' என்ற தந்தை பெரியாரே பெரு மடங்கள் பலவற்றை ஒப்பப் பெரும் பணமும் சீரும் சேர்க்க முடிந்த போது கடவுள் நம்பிக் கையுடைய அடிகளார் சமயம் விடுத்துத் திருக்குறள் வழி நின்றால் எய்த முடியாமலா போகும்?"