உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்லாட்சி

ஈரோடு வேலா (வரலாறு)

195

ஒரு நல்லாட்சி என்பது எது? என்னும் வினாவை எழுப்பிக் கொண்டு வேலா தரும் மறுமொழி வருமாறு:

ஆள்வோர் - ஆளப்படுவோர் ஆகிய இரு திறத்தவர்க்கும்

கிடைக்கும் வாய்ப்புகள் - அமைச்சர் அலுவலர் உழவர் வணிகர் தொழிலர் என்னும் வேறுபாடு இன்றி ஒத்த நிலையில்

-

இயல்பாகக் கிடைக்கும் வகையில் ஆட்சி அமைப்பு இருத்தல் வேண்டும். அந்த ஒப்புரவு அரசு குறள் நெறியால்தான் உண்டாக முடியும் என்பது.

சாதி ஒழிப்பு :

-

சாதிகள் ஒழிய வேண்டுமானால் கசப்பனதுதான் சாதிச்சலுகைகள் ஒழிந்தே ஆக வேண்டும். செல்வ நிலை கல்வி நிலை என்னும் இரண்டு அளவு கோலை மட்டுமே கொண்ட சலுகை உண்டானால்தான் சாதியை ஒழிக்க முடியும்! சாதியும் போக வேண்டும்; சாதிச் சலுகையும் போகக் கூடாது என்றால் நடை பெறக் கூடியதா?

இந்து மதத்திற்குத் தரும் ஏழு திருத்தங்கள் :

1.

2.

3.

4.

5.

6.

சாதி வேறுபாடுகள் இந்து மதத்திலிருந்து அறவே ஒழிக்கப் பெற வேண்டும்.

உரிய தகுதியுள்ள அனைவரும் கோயில்களிலும் திரு மடங்களிலும் (சாதி வேறுபாடுகளின்றி) அனைத்துப் பொறுப்புகளிலும் இடம் பெறல் வேண்டும்.

அறிவியலுக்கும், உண்மைக்கும் மாறான பொய்யுரைப் புராணங்களையும், பழக்க வழக்கங்களையும் (மூட்டை கட்டி) அப்புறப்படுத்த வேண்டும்.

வருணாசிரமம் ஒழிக்கப்பட்ட புதிய இந்து மதம் நிறுவப்பட வேண்டும்.

தாய்மொழி வழிபாடு உரிமையாக்கப் பெற வேண்டும். கூட்டு வழிபாடு என்ற பொய்ம்மை எல்லாச் சமயங் களிலும் புரையோடி விட்டது. இறைமை உணர்வு என்பது தன் தனி உள்ள - முயற்சி அக வழிபாடு என்பதே என நம் மெய்ப்பொருள் உணர்த்துகிறது.

-