உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

7.

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

இறைமையுணர்வைக் கூட்டு வழிபாட்டால் பெறல் யலாது.மனத்துக்கண் மாசிலனாகி, அகவுணர்வு பெற்றுப் பேரா இயற்கை பெறலே நம் இறைமைக் கொள்கை.

இந்து மதத்தில் நுழைந்திருக்கும் மற்றை இழிவுகளைப் போக்க, அவ்வப்போது அறிஞர் பெருமக்கள் கூடி ஆய்ந்து முடிவெடுக்க வேண்டும்.

குறளியம் 1-8-81

நம் திருமடத் தலைவர்களும், சமயச் சொற்பொழிவாளர் களும் இராமாயண, மகாபாரதங்களான இதிகாசங்களை விட்டு விட்டு, என்று குறளிய வழிக்கு மீளுகிறார்களோ அன்று தான் மீனாட்சிபுரம் மீளும். இல்லையேல் பல மீனாட்சி புரங்கள் தொடரும்.

தி.பி. 2014 புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்து

குறளிய நெஞ்சமே!

குறளியம் 1-8-81

நமக்கென வழக்கம்போல் பொங்கலும், திருவள்ளுவர் பிறப்பை ஒட்டிய புத்தாண்டும் வருகிறது. நாமும் நம் முந்தையரும் கடந்த பாட்டையின் நீளத்தைத்தான் 2018 ஆண்டுகள் என இதுவரை அளந்தோமேயன்றி ஓரடிகூட உயர்ந்தோமில்லை. இதை ஏன் எனச் சிந்திப்போர் யாவர்? உறுதுணையாக இருந்து மாற்றுவோர்தாம் யார்?

நம் பண்பாடு, நம் பழக்கம், நம் ஒழுக்கம் எனத் திருக் குறளைத் தீண்டாமலேயே எதை எதையோ சொல்லி நம்மவர் களை அணிசேர்க்கிறதே, இங்கு வலிமையான வஞ்சகக் கூட்டம். அத்தீயுழியை நம்பி அழிகிறது இங்கு நம் மக்கட் கூட்டம்.

நமக்கென்று வாய்த்த தலைமைகள் நம்மைச் செக்கு மாடாகப் பார்க்கின்றனவே யொழியச் சிந்திக்க, வழி தர மறுக்கின்றன. தலைமைகளிலோ அஞ்சிச் சாகும் அவலமும் ஆளடிக்கும் கொடுமையும், தந்நலமே மிகும் கயமைக்குணமும், கொடுமையும், பொறாமையும், வெகுளியும் மனச் சாட்சிகளை மேடையிலே மட்டுங் காட்டி, கைதட்டல் வாங்கிப் பின்னே பொய்ச் சாட்சி ஆகி நிற்கும் பிழைப்பும் முடைநாற்றமாக