உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

197

வீசுகின்றன? நல்லோரை நாடு இனம் கண்டு கொள் மறுக்கிறது. இவைதாம் கடந்த ஆண்டுகளில் நாம் கண்டு கொண்ட உண்மை.

இவற்றை மாற்றவல்ல ஒரு வலிமை நம் குறளியத்தில், வள்ளுவப் பெருந்தகையால் வழங்கப் பெற்றுள்ளதா என ஆய்வதுதான் நம்புத்தாண்டுப் பணி பொங்கல் சிந்தனை.

வேலாவின் எதிர்பார்ப்புகள்

1.

2.

3.

குறளியம் 1-1-1986

திருக்குறள் வழியில் ஒரு பேரரசு அமைய வேண்டும். திருக்குறள் வழியில் குமுகாயம் அமைய வேண்டும். அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டில் தமிழே பயிற்று மொழியும் ஆட்சிமொழியும் ஆதல் வேண்டும். இவற்றுள் பின்னிரண்டு திட்டங்களுக்கும் வித்துகள் ஊன்றப்பட்டுள. முளையும் பாலித்துள்ளது. கிளைத்துத்தழைத்து ஓங்குதல் வேண்டும்.

முன்னதற்கு வித்து ஊன்ற வேண்டும். கட்டாயம் நேர்ந் துள்ளது. உலக உய்வுக்கு அவ்வித்தையன்றி எவ்வித்தை ஊன்றினாலும் வீறுமிக்க வெற்றி விளைவை எய்த இயலாது என்பதைக் கடந்த கால நிகழ்கால வரலாறுகள் மெய்ப்பித்துக் கொண்டு வந்துள்ளன; வருகின்றன! வை வேலாவின் எதிர் நோக்குக் கருதுகோள்கள்.

ஒரு வழிகாட்டுரை

12-11-989 ஆம் நாள் செமினி பார்சன் வசணிக மையத்தில் 'வேலா நிறுவனம்' தொடங்கியது. ஈரோடு வேலா நிறுவனத்தின் கிளையாகிய அதன் தொடக்கத்தைக் குறிப்பிடும் வேலா, தம் தலைமை நிலையத்து நிகழ்ச்சி ஒன்றைச் சுட்டுகின்றார்.

கி.பி. 1963 ஆம் ஆண்டில் ஈரோடு சி-எசு.ஐ. மருத்துவ மனையில் டாக்டர் சாமர் வெல் என்னும் இங்கிலாந்து நாட்டுச் சிறந்த மருத்துவர் பணியாற்றி வந்தார். ஒவ்வொரு மாதமும் முதல்நாள் எங்கள் புத்தக நிலையத்திற்கு வந்து தம் மாத ஊதியத்தில் 5% விழுக்காட்டுத் தொகைக்குப் புத்தகங்கள் வாங்குவார். உடன் தன் மனைவியையும் குழந்தைகளையும் அழைத்து வந்து குறைந்தது 30 மணித்துளிகளாவது கடையில்