உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

தமிழ்மொழி தெரியா விட்டாலும் எல்லாப் புத்தகங்களையும் எடுத்துப் பார்த்துக் கொண்டு நேரத்தைச் செலவழிப்பார். அவரிடம் உரையாடிய போது அவர் "நான் என் குழந்தைகளை உணவுக் கடைக்கும் துணிக்கடைக்கும் வட்டிச் சென்று பழகுவது போல் புத்தக எழுது பொருள் கடைக்கும் கூட்டிச் சென்று பழக்க வேண்டும். இது என் கடமை" என்றார்.

அவர் தம் சொல்லில் இருந்து எங்கள் வணிகத்தின் பொறுப்பை மேலும் உணர்ந்தோம். அறிவு தரும் புத்தக விற்பனைப் பிரிவு நல்ல வருவாய் வழங்காதிருந்தும் எங்கள் நிலையத்தில் அவ்வணிகத்தை வளர்த்து வருவதைக் கடமையாகக் கொண்டுள்ளோம்.

ஐம்பது ஆண்டுகட்கு மேலாக இத்துறையில் இயங்கும் எங்கள் ஈரோடு புத்தக எழுது பொருள் நிலையத்தின் வழியே நூல்களை நேரில் வந்து வாங்கியும் விற்கத் தந்தும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கோ.து.நாயுடு, முனைவர் மு.வ. மற்றும் நல்லோர் பலர் பெருமை சேர்த்துள்ளனர். தமிழகத்தில் மிகச்சிறந்த தமிழறிஞர்களை எங்கள் பதிப்புகளின் மூலமாக அறிமுகப்படுத்திய பெருமை எங்கட்குண்டு. வரலாற்றுப் பெருமைக் குரிய குறளியம் திங்கள் வெளியீடு எங்கள் முத்தாய்ப்பு:" என்பது அது:

குறளாயம்

வருங்காலத்தில் குறளாயம் ஒரு சமுதாய இயக்கமாகலாம், ஒரு சமய இயக்கம் போன்றும் ஆகலாம். அல்லது குறளிய நாட்டையே உருவாக்கும் அரசியல் இயுக்கமும் ஆகலாம். எப்படி ஆயிடினும் எங்கும் எதிலும் அதன் அடிப்படை திருக்குறளே. திருக்குறளைத் தவிர வேறு எதுவும் இருக்கக் கூடாது என்பதே எம்மனோர் முடிவு. திருக்குறளின் அணுகுமுறையைச் சமுதாய உருவாக்கத்திற்கு ஈடுபடுத்துவதே குறளாயம்.

குறளியம் 1-3-86

குறளாயத்தின் சமுதாய நோக்கு தமிழகத்தை ஒப்பி ஏற்றுக் கொள்க.

ஊழல் புரிவோருக்கு வாணாட்சிறை.

இருமுறைக்கு மேல் பதவி இல்லை. எல்லார்க்கும் எல்லாம்.