உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணநலத் தோன்றல் குப்பு முத்து ஐயா

243

முத்துவும் சண்முக சுந்தரமும் தம் திட்டப்படி வேலாவைச் சந்தித்தனர். வேலா திங்கள் தோறும் நிலவுக் கூட்டம் என்னும் பெயரால் இலக்கியக் கூட்டங்களும் திருக்குறள் விளக்கங்களும் தக்கவர்களைக் கொண்டு நடத்தி வந்தார். வேலா தம் தந்தையார் காலத்தில் இருந்தே தமிழ்ப் பற்றுமையும் தமிழ்ப் புலவர் தோழமையும் கொண்டிருந்தார். பள்ளியில் படித்த நாளிலேயே முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதரின் திருக்குறள் பொழிவைக் கேட்டு அதன் மேல் பெரும் பற்றுமை கொண்டி ருந்தார். தவத்திரு குன்றக்குடி அடிகளார் நிறுவிய திருக்குறள் பேரவையில் தொடர்பு கொண்டு கடமை புரிந்தார். பின்னே குறளிய இதழைத் தொடங்கியதுடன் குறளாயம் என்னும் அமைப்பையும் கண்டார்.

எல்லாச் சடங்குகளும் எல்லா நிகழ்ச்சிகளும் திருக்குறளை ஓதியே தொடங்க வேண்டும் என்பதும் திருக்குறளே நம்மறை என்பதும் வேலாவின் கொள்கைகளாகும். இவ் வேலாவை முன்னரே முத்து அறிவார் எனினும், அவர் அறக்கட்டளை பல அமைத்துப் பொதுப்பணி செய்தலை அறிந்திலர். ஆகவே அவரை அணுகி அறக்கட்டளை அமைப்பது பற்றிக் கலந்துரை யாடினார். வேலா எப்படி எப்படியெல்லாம் பொதுப்பணி செய்யலாம் என்பதை விளக்கினார். அறக்கட்டளைப் பதிவு தொடர்பாகத் திரு. வி.என். சுப்பிரமணியம் என்னும் தணிக்கை யரை அணுகி முறைப்படி பதிவு செய்துவிடலாம் என முடிவு கட்டினர்.

என்

முத்து, சுப்பிரமணியத்தை அணுகி அறக்கட்டளைப் பதிவுக்கு ஆவன செய்தார். தணிக்கையர், குழு அமைத்தல், வரிவிலக்குப் பெறுதல் என்னும் சட்ட நடைமுறைகளை யெல்லாம் எடுத்துரைத்தார். முத்துவோ, "யான் எவரிட மிருந்தும் நன்கொடை பெற்றுப் பொதுப்பணி செய்யவோ அறக்கட்டளை அமைக்கவோ விரும்பவில்லை. வருமானத்தில் இருந்தே அவற்றைச் செய்ய விரும்புகிறேன். ஆதலால் குழு அமைத்தல், வரிவிலக்குப் பெறுதல் என்பவை வேண்டா" எனக் கூறி அறக்கட்டளை அமைப்பை உறுதி செய்தார்.தாமே ஒரு பெருந் தொகையை வைப்பு நிதியாக்கி அதன் வட்டியைக் கொண்டு தொடர்ந்து பொதுப்பணி செய்ய முடிவு செய்தார்.