உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

இளங்குமரனார் தமிழ்வளம் – 28

"நாளை எனின் வேளை தவறும்" என்பது பழமொழி. ஆதலால், அதனைத் தள்ளிப் போடாமல் உடனே வைப்பு நிதி ஏற்பாடு செய்துவிட்டார். கொடுத்துப் பழகிய கை, இவ்வளவு அவ்வளவு என வரம்புடன் நின்று விடுவதில்லையே! ஆதலால் வட்டித் தொகையை விஞ்சிய அளவிலும் ஆண்டு தோறும் பொதுப் பணிக்குச் செலவிடுவது நடைமுறையாகி விட்டது முத்துவுக்கு! அறக்கட்டளையைத் தொடர்ந்து தம் மக்களும் அவர்கள் வழியினரும் செய்யவேண்டும் என்றும், அதனைச் செய்யமுடியா நிலைமை ஏற்படின் அரசே அதனை எடுத்துச் செய்யவேண்டும் என்று எழுதிவைத்துள்ளார். பெருந்தகை முத்து.செ.ந.குப்புமுத்து அறக்கட்டளை என்பது அதன் பெயர். வள்ளுவர் வள்ளலார் பற்றுமை

வேலாவைத் தொடர்பு கொண்டது நின்றுவிடவில்லை. தொடர்ந்தது. அது குறளாயத் தொடர்பு ஆகியது. திருக்குறள் தொடர்பும் ஆகியது. "வேலாவைக் காண்பதற்கு முன் திருக் குறளைப் பற்றி அவ்வளவாக நான் அறியவில்லை. அதன் மேல் பற்று ஏற்படவும் இல்லை. வேலாவைக் கண்டு பழகிய பின்புதான் அதன் அருமை பெருமைகளை அறிந்து கொண்டேன்" என்கிறார் முத்து.

"எனக்கு வள்ளலாரைப் பற்றியும் அவ்வளவாகத் தெரியாது. வள்ளலார் பெருமையை மருத்துவர் அரச மாணிக்கனார் தொடர்பு ஏற்பட்ட பின்னரே அறிய வாய்த்தது. அரச மாணிக்கப் பெயருடையவர் இருவரும் வள்ளுவர்க்கும் வள்ளலார்க்கும் என்னை வழிகாட்டி அழைத்துக் கொண்டனர். அவர் நிகழ்த்தும் விழாக்கள் கூட்டங்களில் தவறாமல் பங்கு கொண்டு மகிழ்கிறேன்” என்று மேலும் கூறினார்.

உண்மை இவையே எனினும், எவரே இப்படிச் சொல்வார். தம்மினும் அகவையால் இளமையான இருவரைத் தம் வழிகாட்டி என மனம் நிறைந்து சொல்பவர் எவர்? என்றும் பெருங்குணம் பெருங்குணமாகத் திகழுமே அல்லாமல் சுருங்கி விடுவது இல்லையே!

கல்வி நிலையப் பணிகள்

முத்து பிறந்த செங்கோடன் பாளையத்தில் அரசுத் தொடக்கப்பள்ளி ஒன்று உண்டு. அதன் பெற்றோர் சங்கத்